சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை ஒட்டி ‘சீன் நம்பர் 62′ திரைப்படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிளாக ‘சீதா’ பாடல் வெளியீடு
ஜிகேவி இசையில் பிரியங்கா பாடியுள்ள ‘சீதா’ பாடல் ‘ஆதாம்’ சமரின் இயக்கத்தில் நவமுகுந்தா புரொடக்ஷன்ஸ் மற்றும் பவன்புத்ரா நிறுவனங்கள் தயாரிக்கும் ‘சீன் நம்பர் 62’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
‘ஆதாம்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த இயக்குநர் ‘ஆதாம்’ சமரின் முதல் தமிழ் படமான ‘சீன் நம்பர் 62′-ஐ வேணு ஜி ராமின் நவமுகுந்தா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், நிக்கில் ராமச்சந்திரனின் பவன்புத்ரா பட தயாரிப்பு நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘என் சேவல்’ சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான ‘சீதா’ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள இப்பாடல் பெண்மையின் உணர்வுகளை இசை மூலம் வெளிப்படுத்துகிறது.
அசோகவனத்தில் தவித்த சீதை தன்னை அக்னி பிரவேசம் செய்ய சொன்ன ராமனையும், விரல் கூட படாமல் இலங்கையில் சிறை வைத்திருந்த ராவணனையும் எண்ணிப் பாடும் பாடலாக இது அமைந்துள்ளது.
ஜிகேவி இசையில் சிவப்பிரகாசம் எஸ்-இன் பாடல் வரிகளில் பிரியங்கா பாடியுள்ள இந்த மெல்லிசை பாடல் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது. பாடலை கேட்ட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
‘சீன் நம்பர் 62′ திரைப்படத்தில் கோகிலா கோபால், கதிரவன், அமல் தேவ், ஜாய்ஸ் எலிசபெத், வி ஜே வைத்தி, ஐஸ்வர்யா நாயர் மற்றும் ராகந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். புது முகமாக இருந்தாலும் அனைவரும் ரசிகர்களை கவரும் படியாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி உள்ளனர்.
சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல், பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் ‘சீன் நம்பர் 62’ படமாக்கப்பட்டுள்ளது.
வேணு ஜி ராமின் நவமுகுந்தா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனமும், நிக்கில் ராமச்சந்திரனின் பவன்புத்ரா பட நிறுவன தயாரிப்பில் ‘ஆதாம்’ சமரின் இயக்கத்தில் உருவாகியுள்ள புதுமையான கதைக்கருவை கொண்ட திரைப்படமான ‘சீன் நம்பர் 62’ விரைவில் திரைக்கு வர உள்ளது.