டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘( Fall ) , டிசம்பர் 9 முதல் உலகமெங்கும் ஒளிபரப்பு செய்கிறது.

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் “ஃபால்” இணைய தொடரின் அதிரடியான டிரெய்லர் இன்று வெளியானது. இந்த தமிழ் தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.
அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த “ஃபால்” தொடர் “வெர்டிஜ்” எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலாகும். இத்தொடரினை பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் இந்த ‘ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்’ தொடர் டிசம்பர் 9 முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகை அஞ்சலி, முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இத்தொடரில் எஸ்.பி.பி.சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஒரு இளம் பெண்ணுக்கு தான் தற்கொலைக்கு முயன்ற 24 மணி நேர சம்பவங்கள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதை தேட ஆரம்பிக்கிறாள், தன் நண்பர்கள் உறவினர்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவர, எது உண்மை யாரை நம்புவது எனும் குழப்பம் உண்டாகிறது. மறந்து போன தன் நினைவுகளிலிருந்து உண்மையை கண்டுபிடிக்க முயல்கிறாள்.

தொடரை இயக்கியதுடன் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் இயக்குநர் சித்தார்த் ராமசாமி. அஜேஷ் இசையமைக்க, படத்தொகுப்பு கிஷன் C செழியன்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/11/d2036029-a584-4a4d-8bde-e3e56c348867.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/11/d2036029-a584-4a4d-8bde-e3e56c348867-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘( Fall ) , டிசம்பர் 9 முதல் உலகமெங்கும் ஒளிபரப்பு செய்கிறது. ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் “ஃபால்” இணைய தொடரின் அதிரடியான டிரெய்லர் இன்று வெளியானது. இந்த தமிழ் தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த “ஃபால்” தொடர் 'வெர்டிஜ்' எனும் கனடிய...