டைம் டிராவல் வகைப் பட வரிசையில் இன்னொரு படம்.
ஒரு கால் ஷூ வை தரையில் உதைத்தால் பத்து நிமிடம் பின்னால் போகலாம் இன்னொரு கால் ஷூவை தரையில் உதைத்தால் பத்துநாட்கள் பின்னால் போகலாம் என்கிற மாதிரியான ஒரு ஷூவை கண்டுபிடிக்கிறார் திலீபன். அது சந்தர்ப்ப வசத்தால் யோகிபாபுவை வந்து சேர… அதன்பிறகு யோகிபாபு வாழ்வில் நடக்கும் அதிரடி மாற்றங்கள் ஒருபுறம் இருக்க…
இதற்கிடையே குடிகார அப்பாவால் பாலியல் கும்பலுக்கு விற்கப்பட்ட சிறுமி பிரியா, அந்த கும்பலிடமிருந்து எப்படி தப்பித்து மற்ற சிறுமிகளையும் காப்பாற்றுகிறாள்? இந்த கதைக்குள் யோகிபாபு எப்படி இடைப்படுகிறார் என்பது சுவாரசிய திரைக்களம்

யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி, கேபிஒய்.பாலா கூட்டணி சிரிக்க வைக்கிறார்கள். சில இடங்களில் சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.

படத்தின் நாயகியாக வரும் சிறுமி பிரியா கல்யாணின் பாத்திர வடிவமைப்பும் அதற்கான அவரது நடிப்பும் படத்தை தூக்கி நிறுத்துகிறது. இவர் படத்தின் இயக்குனர் கல்யாணின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது
பிரியாவின் அப்பாவாக குடிகார கேரக்டரில் பாடகர் அந்தோணிதாசன் தள்ளாடினாலும், நடிப்பு தள்ளாடவில்லை.
இசை சாம்.சி.எஸ். ‘ஒ.எஸ்’ சொல்ல முடியவில்லை. சிறுமிகளுக்கான பாலியல் தொல்லை தொடர்பான காட்சிகளில் தாராளமாய் கத்திரி வைத்திருக்கலாம்.

கல்யாண் இயக்கி இருக்கிறார். மகளை முன்னிலைப்படுத்த எடுத்த காட்சிகளில் அப்பாவாக ஜெயித்திருக்கிறார். காமெடி நட்சத்திரங்களை வைத்து சீரியஸ் படம் எடுக்க தனி தைரியம் வேண்டும்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/10/sew-1024x576.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/10/sew-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்டைம் டிராவல் வகைப் பட வரிசையில் இன்னொரு படம். ஒரு கால் ஷூ வை தரையில் உதைத்தால் பத்து நிமிடம் பின்னால் போகலாம் இன்னொரு கால் ஷூவை தரையில் உதைத்தால் பத்துநாட்கள் பின்னால் போகலாம் என்கிற மாதிரியான ஒரு ஷூவை கண்டுபிடிக்கிறார் திலீபன். அது சந்தர்ப்ப வசத்தால் யோகிபாபுவை வந்து சேர... அதன்பிறகு யோகிபாபு வாழ்வில் நடக்கும் அதிரடி மாற்றங்கள் ஒருபுறம் இருக்க... இதற்கிடையே குடிகார அப்பாவால் பாலியல் கும்பலுக்கு விற்கப்பட்ட...