சினிமாவில் 45- வது ஆண்டில் நடிகர் மோகனின் கலைப்பயணம்… முதியோருக்கு அன்னதானம் வழங்கி மகிழ்ந்தார்

சினி நிகழ்வுகள் நடிகர்கள்


தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகன் என்று கொண்டாடப்படும் நடிகர் மோகன் தனது சினிமா பயணத்தின் 45-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அன்னை உள்ளம் முதியவர்கள் காப்பகத்தில் உள்ள முதியோருக்கு அன்னதானம் வழங்கி அவர்களின் வாழ்த்துக்களை பெற்றார்.

இந்நிகழ்வினை அவரது ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்தனர்.

நடிகர் மோகன் ரீ என்ட்ரி ஆகும் ‘ஹரா’ திரைப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி, இசையமைப்பாளர் லியாண்டர் மார்டி உள்ளிட்டோரும் இந்த அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *