சினிமா செய்திகள்திரை விமர்சனம்

பிஸ்தா பட விமர்சனம்

நாயகன் சிரிஷ் மற்றும் அவரது நண்பர்களின் வேலையே நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்துவது தான். விருப்பமில்லாத பெண்களின் திருமணத்தை கடைசி நேரத்தில் நிறுத்தி அதன் மூலம் பல குடும்பங்களின் வயிற்றெரிச்சலையும் எதிர்ப்புகளையும் சம்பாதிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட வேலை செய்யும் நாயகன், மிருதுளா முரளியைக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் காதலன் செய்யும் வேலை பற்றி தெரிய வரும் காதலி, காதலுக்கு குட்பை சொல்லி பிரிகிறார். பிரிந்த ஜோடி திருமணத்தில் இணைந்ததா என்பது கதை.
மெட்ரோ படத்தில் அழுத்தமான கேரக்டர் மூலம் தன்னை நடிப்பில் உருவாக்கிக் கொண்ட சிரிஷூக்கு இதில் காமெடி பாத்திரம். காதலியின் பிரிவுக்குப் பிறகான காட்சிகளில் நடிப்பு தெரிகிறது.
நாயகி மிருதுளா முரளியை விட அவர் தோழியாக வரும் அருந்ததி நாயர் அழகாக இருக்கிறார். பேராசிரியர் ஞானசம்பந்தன், லொள்ளு சபா சாமிநாதன், நமோ நாராயணன், யோகிபாபு அண்ட் கோ நகைச்சுவை என்கிற பெயரில் மலிவான காமெடி காட்சிகளை வைத்துக் கொண்டு கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.
இப்படியெல்லாமா யோசிப்பார்கள்? என்ற கேட்கிற அளவுக்கு அந்த ‘மானங்கெட்ட குடும்பம்’ ப்ளாஷ்பேக் குமட்டல் ரகம். ஆபாசம் தான் காமெடி என்று இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?
படம் முழுக்க வரும் திருமண வீடு சார்ந்த பின்னணிக் காட்சிகள் மட்டும் ஓரளவு ஆறுதல். கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் மட்டும் இயக்குனர் ரமேஷ்பாரதி தெரிகிறார்.

தலைப்பில் இருக்கும் ஊட்டம் படத்தில் கொஞ்சமாவது இருந்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *