பிப்ரவரி 27 ஞாயிறு மாலை 4 மணிக்கு கவிஞர் வைரமுத்து புத்தகக் காட்சிக்கு வருகிறார் தம் படைப்புகளில் வாசகர்களுக்குக் கையொப்பமிடுகிறார்
2022 கவிஞர் வைரமுத்துவின் இலக்கியத்திற்குப் பொன்விழா ஆண்டாகும். அவரது முதல் புத்தகமான ‘வைகறை மேகங்கள்’ 1972இல் வெளிவந்தது. இதுவரை 38 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கவிஞர் வைரமுத்துவின் 17 புத்தகங்களை முத்தமிழறிஞர் கலைஞர் வெளியிட்டிருக்கிறார். அண்மையில் கவிஞர் வைரமுத்துவின் இலக்கியப் பொன்விழா இலட்சினையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சாகித்ய அகாடமி விருது பெற்ற இவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 22 இந்தியமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
‘வைரமுத்து இலக்கியம் 50’ ஐ வாசகர்களோடு கொண்டாட,
கவிஞர் வைரமுத்து பிப்ரவரி 27 ஞாயிறு மாலை 4 மணிக்கு சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருகை தருகிறார்; வாசகர்கள் வாங்கும் தம் படைப்புகளில் கையொப்பமிடுகிறார்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அமைத்துள்ள பொருநை ஆற்றங்கரை நாகரிகம் தொல்பொருள் கண்காட்சி அரங்கின் அருகில், திறந்தவெளியில் கவிஞர் வைரமுத்து கையொப்பமிடும் நிகழ்ச்சிக்காகத் தனி மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. கையொப்பமிட்டு முடிந்ததும் புத்தக அரங்குகளில் வாசகர்களோடு வலம் வருகிறார்.
பபாசி தலைவர் வைரவன், செயலாளர் முருகன், பொருளாளர் குமரன், நிர்வாகிகள் பழனி, மைலவேலன், புருசோத்தமன், மெய்யப்பன், சுப்ரமணியன் மற்றும் பதிப்பாளர்கள் வேடியப்பன், ஒளிவண்ணன், சிராஜ் உள்ளிடோர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.