சினிமா செய்திகள்

மகனுக்காக பாடல் எழுதிய தங்கர்பச்சான் டைரக்டர் வெங்கட்பிரபு ரிலீஸ் செய்த ‘தக்கு முக்கு திக்கு தாளம்’

தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் கதை விஜித் பச்சான் நாயகனாக நடிக்கும் படம் ‘தக்கு முக்கு திக்கு தாளம்.’ இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டைரக்டர் வெங்கட் பிரபு ரிலீஸ் செய்த இந்த பாடலை சோனி ஆடியோ நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது..

தமிழ் சினிமாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பின் ‘அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள்’ போன்ற காலத்தால் அழியாத படங்களை இயக்கியவர் தங்கர் பச்சான். நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது அவர்இயக்கும் தக்கு முக்கு திக்கு தாளம் படத்தில் மகன் விஜித் பச்சானை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.
இதுவரையில் கிராமத்து பின்னணியில் அழுத்தமான படைப்புக்களை தந்தவர் இம்முறை சென்னை நகரத்தை மையமாக கொண்ட, முற்றிலும் மாறுபட்ட முழு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைப் படமாக இப்படத்தை இயக்குகிறார்.

படப்பிடிப்பு முழுக்க சென்னையை சுற்றி நடைபெற்றுள்ளது. படம் இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. இளைஞர்கள் கொண்டாடும் இளமை ததும்பும் பாடல் வரிகளால் முதன் முறையாக வித்தியாசமாக எழுதி பாடல் ஆசிரியராகவும் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார், தங்கர்பச்சான்.

பாடல் இப்படி தொடங்குகிறது.
“தக்கு முக்கு திக்கு தாளம்
போடப்போறண்டா!
நம்ம பொண்ணுங்கள ஜிகுஜிகுன்னு
​​​​மாத்தப்போறண்டா!
சில்லாக்கி பில்லாக்கி சீனாக்குட்டியே
​இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே!
புரோட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு
​என்னக் கட்டிப்புடிச்சி கடிச்சிடேண்டி என் ஜிகு ஜிகுச்சான்!

இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாடலை பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்ற இசை அமைப்பாளர் தேவா, தனது காந்தர்வ குரலால் பாடி அசத்தியுள்ளார். தரண்குமார் இசை அமைத்துள்ளார்.

படத்தில் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் முனீஸ்காந்த் நடிக்கிறார். அவர்களுடன் மிலனா நாகராஜ், அஸ்வினி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா மற்றும் யோகிராம் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு பிரபு தயாளன் – சிவபாஸ்கரன். படத்தொகுப்பு சாபு ஜோசப். கலை சக்தி செல்வராஜ்,நடனம் தினேஷ், சண்டைப்பயிற்சி ஸ்டன்ட் சில்வா.
Pro:ஜான்சன்.
பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது.

கோடை வெளியீட்டுக்கு தயாராகி வருகிறார்கள், படக்குழுவினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *