திரை விமர்சனம்

தண்ணி வண்டி பட விமர்சனம்

மதுரையில் வண்டியில் தண்ணீர் கொண்டு சென்று ஊற்றும் வேலை செய்கிறான் சுந்தர மகாலிங்கம். அதே ஊரில் பவர் இஸ்திரி கடை நடத்துகிறார் தாமினி. இவர்களுக்குள் காதல்.

அந்த ஊரில் புதிதாக பொறுப்பேற்கும் கண்டிப்பான பெண் அதிகாரிருக்கு ‘ஆண் பலவீனம்.’ தன் தோழிக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் பெண் அதிகாரி தனிமையில் இருப்பதைப் பார்க்கும் தாமினி அதிரச்சி அடைகிறாள். இதுவிஷயம் ஊருக்கும் தெரிய வர…

தன்னை ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டியது தாமினி தான் என ஆத்திரம் கொள்ளும் பெண் அதிகாரி, தாமினி உள்ளிட்டவர்களை கொல்ல முடிவெடுக்கிறார். முடிவு என்ன என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்.

சுந்தர மகாலிங்கமாக நாயகன் உமாபதி ராமையா. நடிப்பில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. நண்பன் பால சரவணனுடன் சேர்ந்து செய்யும் காமெடி கலாட்டாவிலும் ரசிக் கவைக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள், நடனக் காட்சியிலும்முன்னேற்றம். காதல் காட்சியில் மட்டும் தான் இன்னும் கொஞ்சம் மெருகேற வேண்டும்.
தாமினியாக வரும் அழகான சம்ஸ்கிருதிக்கு நடிப்பும் வருகிறது. தோழியாக வரும் வித்யூலேகா, தம்பி ராமையா, தேவதர்ஷினி காமெடிக்கு.
பெண் அதிகாரியாக வரும் வினுதா லால் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்.

விததியாசமான கதைக்கருவை எடுத்துக் கொண்டு திரைப்படுத்திய மாணிக்க வித்யாவிடம் வருங்கால பிரகாசம் தெரிகிறது. மோசசின் இசையும் வெங்கட்டின் ஒளிப்பதிவும் இந்த தண்ணி வண்டியின் சக்கரங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *