Divyabharathi, GV Prakash in Bachelor Tamil Movie Posters 6e54df6

கட்டுப்பாடில்லா காதல் வாழ்க்கை கர்ப்பத்தில் முடிந்தால்…அதை கலைக்க விரும்பாத காதலியிடம் ‘பேமிலிமேன்’ ஆக விரும்பாத பேச்சிலர் இளைஞன் ‘கலைத்தே ஆகவேண்டும்’ என்று அடம் பிடித்தால்…காதலியின் அடுத்த கட்ட முடிவு என்னவாக இருக்கும் என்பதை கோர்ட் வரை அலசி காயப்போட்டிருக்கிற படம்.
மணமுடிக்காமலே சேர்ந்து வாழும் காதலர்களால் அவர்கள் குடும்பம் படும்பாட்டையும் கதைக்குள் சேர்த்த விதத்தில் தனி கவனம் பெறுகிறான், இந்த பேச்சிலர்.
கோயம்புத்தூரிலிருந்து பெங்களூரு ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரியச் செல்லும் ஜி.வி.பிரகாஷ். அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் திவ்யபாரதியை கண்டதும் காதலாகிறார். விதி, அவர் தங்கியிருக்கும் ரூமுக்கே ஜி.வி.பிரகாஷை கொண்டு வந்து சேர்க்க, நட்பு காதலாகிறது. ஒரு கட்டத்தில காமம் ஆகிறது. கர்ப்பமான காதலியை கலைக்கச்சொல்லி வற்புறுத்த, மறுக்கிறார், திவ்யபாரதி. இதற்கு பின் என்ன நடக்கிறது என்பதை நீட்டி முழக்கி சொல்லியிருக்கிறார்கள்.

நாயகனாக எதையும் ஈசியாக எடுத்துக் கொள்ளும் கேரக்டரில் ஜி.வி.பிரகாஷ். காதலி கருவுற்றது தெரிய வந்த இடத்தில் தடுமாறும் மனோபாவத்தை நடிப்பில் அழகாக வெளிப்படுத்துகிறார். பிற்பகுதியில் இவரை பேசவிடாமல் மற்றவர்கள் ஆளாளுக்கு பேசி இவரை ‘பேச்சிலர்’ (பேச முடியாதவர்) ஆக்குவது திரைக்கதை பலவீனம்.

நாயகியாக திவ்யபாரதி அறிமுகம் என்றால் நம்புவதற்கில்லை. ‘என்ன லவ்வா?’ என்று உடன் வேலை பார்க்கும் ஜி.வி.யிடம் உஷாராக கேட்பதில் தொடங்கி, தான் ஏமாந்து விட்டோம் என்று உணரும் வரை அம்மணி நடிப்பில் உயரம் அதிகம். பிற்பகுதியில் இவரையும் பேசாமடந்தை ஆக்கி விட்டார்கள்.

ஜி.வி.யின் மாமா கேரக்டரில் முனிஸ்காந்த். மனிதர் வந்த பிறகு படம் அத்தனை சீரியஸ் தாக்கத்திலும் கலகலப்புக்கு இடம் பெயருவது இனிய ஆச்சரியம்.

புதுமாதிரி வைத்தியராக வந்து சீரியஸ் காட்சியிலும் கிச்சுகிச்சு மூட்டுகிறார், மிஷ்கின்.

தேனி ஈஸ்வரின் கேமராவும் சித்து குமாரின் இசையும் அறிமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமாருக்கு பெரும்பலம். கிளைமாக்சில் நாயகி எடுக்கும் முடிவும், அதைத் தொடர்ந்து நாயகனின் பதற்றமும் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு விதை போட்டு இருப்பது வெளிப்படை. முதல்பாதியில் நெளியவைக்கும் தேவையற்ற நீளத்தை குறைத்திருந்தால், ரசிகன் இன்னும் கொண்டாடி இருப்பான்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/12/GV-Prakash-Divyabharathi-Bachelor-Tamil-Movie-Posters-1f3cd33-768x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/12/GV-Prakash-Divyabharathi-Bachelor-Tamil-Movie-Posters-1f3cd33-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்திரைப்படங்கள்கட்டுப்பாடில்லா காதல் வாழ்க்கை கர்ப்பத்தில் முடிந்தால்...அதை கலைக்க விரும்பாத காதலியிடம் ‘பேமிலிமேன்’ ஆக விரும்பாத பேச்சிலர் இளைஞன் ‘கலைத்தே ஆகவேண்டும்’ என்று அடம் பிடித்தால்...காதலியின் அடுத்த கட்ட முடிவு என்னவாக இருக்கும் என்பதை கோர்ட் வரை அலசி காயப்போட்டிருக்கிற படம். மணமுடிக்காமலே சேர்ந்து வாழும் காதலர்களால் அவர்கள் குடும்பம் படும்பாட்டையும் கதைக்குள் சேர்த்த விதத்தில் தனி கவனம் பெறுகிறான், இந்த பேச்சிலர். கோயம்புத்தூரிலிருந்து பெங்களூரு ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரியச் செல்லும்...