Lyca Productions தயாரிப்பில் யோகிபாபு நடித்திருக்கும் ‘பன்னிக்குட்டி’ திரைப்படத்தை , 11:11 Productions நிறுவனம் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது.
தமிழ் திரைத்துறையில் தரமான திரைப்படங்களை அளித்து வரும், இரண்டு மதிப்புமிகு தயாரிப்பு நிறுவங்கள் ஒன்றிணைந்துள்ளன. 11:11 Productions தயாரிப்பாளர் Dr. பிரபு திலக் அவர்கள், Lyca Productions தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களுடன் இணைந்து, யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள காமெடிப் படமான ‘பன்னிக்குட்டி’ படத்தினை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறார்.

11:11 Productions நிறுவன இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷ்ருதி திலக் இது குறித்து கூறியதாவது….
‘‘எங்கள் தயாரிப்பு நிறுவனம் 11:11 Productions “பன்னிக்குட்டி” படத்தின் தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா வெளியீட்டிற்கு, Lyca Productions உடன் இணைவதில் மிகுந்த பெருமை கொள்கிறோம். ஒரு நிறுவனமாக ரசிகர்களின் ஏக்கங்களை நிறைவு செய்யும் தரமான பொழுது போக்கு படைப்புகளை அளிக்கும் நோக்கில் முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக பன்னி குட்டி திரைப்படத்தை திரைப்பட ரசிகர்களுக்கு அளிப்பது மகிழ்ச்சி.

குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக திரையரங்கு சிரிப்பு மழையில் நனையும் எனபதை உறுதியாக நம்புகிறோம். 11:11 Productions எப்போதும் திரை ரசிகர்கள் இதயம் கனிந்து ரசித்து மகிழும் திரைப்படத்தை வழங்கி வருதில் மிகுந்த பெருமை கொள்கிறது. அந்த வரிசையில் பன்னிக்குட்டி படமும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்.
படத்தை அனுசரண் இயக்கியுள்ளார்.

யோகிபாபுவைத் தவிர்த்து, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு K இசையமைத்துள்ளார். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு. செய்துள்ளார். சண்டைப்பயிற்சி இயக்கத்தை ஃபயர் கார்த்திக் செய்ய, M.R.ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்), சமீர் பரத் ராம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர். கதை ரவி முருகையா.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/a7aaa985-9531-4ed2-8819-7ae814b7070d-682x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/a7aaa985-9531-4ed2-8819-7ae814b7070d-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்Lyca Productions தயாரிப்பில் யோகிபாபு நடித்திருக்கும் ‘பன்னிக்குட்டி’ திரைப்படத்தை , 11:11 Productions நிறுவனம் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது. தமிழ் திரைத்துறையில் தரமான திரைப்படங்களை அளித்து வரும், இரண்டு மதிப்புமிகு தயாரிப்பு நிறுவங்கள் ஒன்றிணைந்துள்ளன. 11:11 Productions தயாரிப்பாளர் Dr. பிரபு திலக் அவர்கள், Lyca Productions தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களுடன் இணைந்து, யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள காமெடிப் படமான ‘பன்னிக்குட்டி’ படத்தினை தமிழ்நாடு மற்றும் கேரளாவில்...