முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் பாதுக்காப்பான தீபாவளி விழிப்புணர்வு நிகழ்வு

முகப்பேர் வேலம்மாள் பள்ளி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறையடன் இணைந்து நடத்திய பாதுக்காப்பான தீபாவளி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (26.10.21)பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு தீயணைப்பு துறையின் இணை இயக்குனர் திருமதி N பிரியா ரவிச்சந்திரன் அவர்கள் மாவட்ட அலுவலர் திரு சரவணன் அவர்கள் கூடுதல் மாவட்ட அலுவலர்கள் திரு கார்த்திகேயன் மற்றும் திரு சூர்ய பிரகாஷ் ஆகியோர் முதன்மை விருந்தினார்களாக கலந்து கொண்டனர்
பாது காப்புடன் பட்டாசுகளை வெடிப்பது எப்படி என்பதை தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் ஒத்திகை செய்து காட்டினர்
வேலம்மாள் பள்ளி முன்னெடுத்த இந்த உன்னதமான பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுங்கள் என்ற நிகழ்வு சமூக அக்கறை கொண்டதாக இருந்தது.
