சிவகார்த்திகேயன் கரியரில் மிக முக்கியமான படம் என்பதை விட அவர் தயாரிப்பில் இது மிக முக்கியமான படம் என்று சொல்லலாம். படம் வெளி வருவதற்குள் அவ்வளவு பிரச்சனைகள். ஆனால் அப்பிரச்சனைகளை எல்லாம் மறந்து போகும் அளவிற்கு படம் சிறந்து விளங்கியிருக்கிறது.

ஒரு ராணவ டாக்டரான சிவகார்த்திகேயன் நாயகி பிரியங்கா மீது மையல் கொள்கிறார். அவரை பெண் கேட்டுச் செல்கிறார். சிறிது நாட்கள் பழகியதால் சிவகார்த்திகேயனின் சீரியஸ் டைப் பிரியங்காவிற்கு பிடிக்காமல் போக சிவகார்த்தியனை பிரியங்கா வேண்டாம் எனச்சொல்கிறார். அவர் சொல்லும் அந்தக் காட்சியில் பிரியங்காவின் அண்ணன் மகள் காணாமல் போக..அந்தப்பெண்ணை கண்டுபிடிக்க சிவகார்த்திகேயன் உதவி செய்ய…அடுத்தடுத்து என்ன என்பதை சிரிக்க சிரிக்க சொல்லி அசத்தியிருக்கிறார்கள். வெல்டன் நெல்சன்

சிவகார்த்திகேயன் மிகவும் செட்டில்டான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிர்ந்து சிரிக்காமல் அவர் காட்டும் பாடி லாங்குவேஜ் வேறலெவலில் வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. பிரியங்கா அருள்மோகன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். அர்ச்சனா அம்மா கேரக்டரில் கலக்கியிருக்கிறார். ஒரு எமோஷ்னல் சீனில் அர்ச்சனா பேமிலி சிறப்பாக நடித்திருக்கிறது. படத்தின் இருபெரும் தூண்கள் யோகிபாபுவும், ரெடின் கிங்ஸ்ட்லியும் தான். இருவரும் இணைந்து செய்யும் அலப்பறைகளில் தியேட்டரிகளில் சிரிப்பலையை கன்ட்ரோல் பண்ண முடியவில்லை. இனி இந்தக்கூட்டணியை பல படங்களில் பார்க்க முடியும்.

படத்தின் டெக்னிக்கல் டீம் கலக்கியிருக்கிறது. மெட்ரோ ட்ரைனில் ஒரு பைட் சீக்வென்ஸ் வருகிறது. அட்டகாசம் அதகளம். ஒவ்வொரு ப்ரேமிலும் ஒளிப்பதிவாளர் தனித்துத் தெரிகிறார். படத்தை வேறோர் தளத்திற்கு எடுத்துச் செல்வது அனிருத்தின் பின்னணி இசை. மனிதர் மாஸ் காட்டியிருக்கிறார்.

இப்படி நிறைய பாசிட்டிவ் விசயங்கள் இருந்தாலும் லாஜிம் மேட்டர்ஸ் மட்டும் கொஞ்சம் உதைக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் சிரிப்பு மேட்டர்ஸ் டீல் செய்து விடுகிறது. ஆக இந்த விடுமுறையை ஜாலியாக கொண்டாட டாக்டரை குடும்பத்தோடுச் சென்று பார்க்கலாம்