நாயகன் செந்தில்நாதன் கிராமத்தில் இயற்கை உணவகம் நடத்தி வரும் செந்தில்நாதன் அதே ஊரில் வசிக்கும் சாண்ட்ரா நாயரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். பிரசவத்தின் போது, ஆங்கில மருத்துவத்தால் சாண்ட்ரா இறந்து விட…

தனக்கு பிறந்த பெண் குழந்தையை அதிக பாசத்துடன் வளர்த்து வருகிறார் செந்தில்நாதன். குழந்தை 6 வயதில் இருக்கும் போது, மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். செந்தில்நாதனின் மகளை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? மகளை செந்தில்நாதன் மீட்டாரா? என்பது மீதிக்கதை.
நாயகனாக வரும் செந்தில்நாதிடம் அறிமுகம் என்பதையும் தாண்டி நடிப்பு தெரிகிறது. அவரது மனைவியாக வரும் சாண்ட்ரா அளவான நடிப்பில் பிரகாசிக்கிறார். மற்றொரு நாயகி அர்ச்சனா சிங் இயல்பான நடிப்பில் பெயர் வாங்குகிறார்.. குழந்தை நட்சத்திரமாக வரும் பதிவத்தினி தந்தையை செல்லமாக மிரட்டும் இடம்

பாலாஜி சண்முகசுந்தரம், குள்ளபுலி லீலா, செல்லத்துரை, விக்ரமாதித்யன் கேரக்டர்களோடு இணைந்து படத்தை தாங்குகிறார்கள்.

இயற்கை மருத்துவத்தின் மகிமை, காதல், மெடிக்கல் கிரைம் என கலந்து கொடுத்து கவனிக்க வைக்கிறார், இயக்கிய சபரிநாதன். மஸ்தான் காதரின் இசையில் 2 பாடல்கள் சுக ராகம்.