தனது ஒவ்வொரு படங்களிலும் பொதுவுடமை பற்றி பேசும் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், அந்த பொருளாதாரத்தின் ஆரம்பமே விவசாயிகள் தான் என்ற உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார்.
தனது கிராமப்புற விவசாயிகளை ஒன்றிணைத்து கூட்டுப்பண்ணை முறை விவசாயத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் இறங்குகிறார், விஜய்சேதுபதி. ஆனால், அந்த விவசாய நிலங்களை கைப்பற்றி பயோ டீசல் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டும் முயற்சியில் வில்லன் ஜெகபதிபாபு இறங்க, அவரிடம் இருந்து விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் விஜய் சேதுபதி மீட்டாரா, இல்லையா என்பது திகுதிகு திரைக்கதை.
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் மட்டும் இல்லை என்றால், உணவு மட்டும் அல்ல, நாட்டின் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட இயங்க முடியாது என்பதை அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கும் விதத்துக்காகவே இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு ராயல் சல்யூட்.
விவசாயிகளின் தோழனாக வரும் விஜய் சேதுபதி சமூக பிரச்சினைகள் குறித்து பேசுவதோடு வன்முறையாளர்களை அவ்வப்போது சுளுக்கும் எடுக்கிறார். கறிக்கடை பக்கிரிசாமியாக வரும் பிளாஷ்பேக் காட்சியில் ஒரு சின்னக் காதலும் ஹைக்கூவாக எட்டிப் பார்த்துப்போவது அழகு.
நடனக்காரி கிளாராவாக படம் தொடங்கி 45 நிமிடம் கழித்து திரையில் முகம் காட்டுகிறார், ஸ்ருதிஹாசன். விஜய்சேதுபதியிடம் ‘லவ் பண்றீங்களா’ என்று கேட்கும் காட்சியில் திரையரங்கை கலகலக்கப் பண்ணுகிறார்.
தொழிலாளிகளை சுரண்டும் கார்ப்பரேட் முதலாளியாக ஜெகபதிபாபு, அவரது தொழில்முறை நண்பர்களாக அழகன் தமிழ்மணி, மாரிமுத்து, விஜய் சேதுபதியின் நண்பர்கள் கலையரசன், ரமேஷ் திலக், டேனி, நித்தீஷ் வீரா, பிருத்வி பாண்டியராஜன், ஜெய்வர்மன், வில்லனின் உதவியாளர் சாய் தன்ஷிகா என அத்தனைபேரும் கேரக்டரோடு பொருந்திப் போகிறார்கள்.
ராம்ஜியின் ஒளிப்பதிவும், டி.இமானின் பாடல்களும் கதையோடு இணைந்த அழகு.
கார்ப்பரேட் என்பது தொழிலாளிகளை மட்டுமின்றி முதலாளிகளையும் அழிக்கும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர், பஞ்சமி நிலம் மீட்பு, பொதுத்துறை சொத்துக்கள் தனியாருக்கு விற்கப்படுவதில் நடக்கும் முறைகேடு பற்றியும் எச்சரிக்கை மணி அடிக்கிறார்.
இந்த ‘’ மக்களுக்கானது.

 

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/09/Laabam-6sheet-1-1.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/09/Laabam-6sheet-1-1-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்நடிகர்கள்தனது ஒவ்வொரு படங்களிலும் பொதுவுடமை பற்றி பேசும் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், அந்த பொருளாதாரத்தின் ஆரம்பமே விவசாயிகள் தான் என்ற உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார். தனது கிராமப்புற விவசாயிகளை ஒன்றிணைத்து கூட்டுப்பண்ணை முறை விவசாயத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் இறங்குகிறார், விஜய்சேதுபதி. ஆனால், அந்த விவசாய நிலங்களை கைப்பற்றி பயோ டீசல் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டும் முயற்சியில் வில்லன் ஜெகபதிபாபு இறங்க, அவரிடம் இருந்து விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் விஜய் சேதுபதி மீட்டாரா,...