அறிமுக இசை அமைப்பாளர் நந்தா இசையில் தயாராகியிருக்கும் ‘வரிசி’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

புதுமுக இயக்குனர் கார்த்திக் தாஸ் இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘வரிசி’. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை சப்னா தாஸ் நடிக்க, இவர்களுடன் அனுபமா குமார், கணேஷ் பாலாஜி சந்திரசேகர், துஷாரா, கிருஷ்ணா, ஜெயஸ்ரீ, ஆவீஸ் மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மிதுன் மோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் நந்தா இசை அமைத்திருக்கிறார்.

சிறிய பட்ஜெட்டில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘வரிசி’ படத்தின் ஆடியோவை மூத்த ஊடகவியலாளர் ‘கலைமாமணி’ தேவி மணி வெளியிட, பாடலாசிரியர் கு. கார்த்திக் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.

படத்தைப் பற்றி இயக்குனரும், நடிகருமான கார்த்திக் தாஸ் பேசுகையில்,’ குறும்படங்களை இயக்கி இணையதள பார்வையாளர்களின் ஆதரவு கிடைத்த நம்பிக்கையில் ‘வரிசி’ படத்தை இயக்கி இருக்கிறேன். ‘வரிசி’ என்றால் ‘தூண்டில்’ என பொருள். மீனவர்களிடத்தில் இந்த சொல் எளிமையாக புழங்கும் சொல். கதைக்கு பொருத்தம் என்பதால் இதனை சூட்டி இருக்கிறோம். கதையில் நான்கு ஜோடிகளின் வாழ்வியலை கமர்ஷியல் அம்சங்களுடன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறோம். ‘ என்றார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/03/d7d5de45-ec75-46f8-bf76-7d2d07dbed0b.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/03/d7d5de45-ec75-46f8-bf76-7d2d07dbed0b-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்அறிமுக இசை அமைப்பாளர் நந்தா இசையில் தயாராகியிருக்கும் 'வரிசி' படத்தின் இசை வெளியீடு சென்னையில் எளிமையாக நடைபெற்றது. புதுமுக இயக்குனர் கார்த்திக் தாஸ் இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'வரிசி'. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை சப்னா தாஸ் நடிக்க, இவர்களுடன் அனுபமா குமார், கணேஷ் பாலாஜி சந்திரசேகர், துஷாரா, கிருஷ்ணா, ஜெயஸ்ரீ, ஆவீஸ் மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மிதுன் மோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும்...