ஆக்டர் ரவிச்சந்திரன் டெத் டே!

தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவரை இயக்குனர் ஸ்ரீதர் 1964ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். பின்னர் அதே கண்கள், இதய கமலம், கவுரி கல்யாணம், குமரி பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். ரவிச்சந்திரன் ஸடைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. […]

Continue Reading

விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன் 2’

நடிகர் விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. ‘பாரம்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம்ஸின் பத்தாவது தயாரிப்பாகும். இது குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆன்டனி, “எங்களது மற்றுமொரு கனவுப் படமான பிச்சைக்காரன் 2 படம் குறித்து அறிவிப்பதில் பெரும் […]

Continue Reading

ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது.

நடிகர் நித்தின்சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான ‘லாக்கப்’ படத்தின் சிலிர்க்க வைக்கும் டீஸர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. தற்போது இப்படம் ஆக்ஸ்ட் 14 அன்று ZEE5 தளத்தில் வெளியாக தயாராகவுள்ளது. மிகப்பெரிய கான்டெக் நிறுவனமான ZEE5, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த, பல வகையான சிறந்த படைப்புகளை தொடர்ச்சியாக பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ZEE5-ன் சமீபத்திய ஒரிஜினல் திரைப்படமான ‘லாக்கப்’ மிகச்சிறந்த, சிலிர்க்க வைக்கும் திரில்லருடன் சீட்டின் நுனிக்கு பார்வையாளர்களை கொண்டுவரும் அனுபவங்களை உள்ளடக்கியதாக இருக்கும். […]

Continue Reading

டேனி படத்தின் ஹீரோ யார்? வரலெட்சுமி விளக்கம்

டேனி படம் பற்றி வரலெட்சுமி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் தமிழ்சினிமாவில் அடுத்து அதிரடியாக ஓடிடியில் களம் இறங்கும் படம் டேனி. தினேஷ்மோகன் இயக்கியுள்ள இப்படத்தை இயக்குநர் பி.ஜி முத்தையா தீபா ஆகியோர் தயாரித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இப்படம் ZEE-5 தளத்தில் வெளியாக இருக்கிறது. இப்படம் பற்றி நாயகி வரலெட்சுமி சரத்குமார் பேசும்போது, “நாய் என்ன நம்மைவிட குறைவா…? அந்த டேனி என்கிற நாய்தான் இந்தப் படத்தின் ஹீரோ. இதில் நான் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளேன். நான் […]

Continue Reading

நடிகை வனிதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த சூர்யா தேவி கைது

பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான வனிதா பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தது சமூக வலைதளங்களில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இருவரின் திருமணத்தை ஆபாசமாக விமர்சித்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு வந்த சூரிய தேவி என்கிற பெண் மீது நடிகை வனிதா புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியபோது சூரிய தேவி என்ற லேடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து வீடியோக்களை நீக்கம் செய்ய வேண்டும் என வனிதா […]

Continue Reading

‘ஓ மை கடவுளே’ படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு!

ஒட்டு மொத்த ‘ஓ மை கடவுளே’ படக்குழுவும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஆந்திரப் படவுலகின் இளவரசனும் பலமான கட்டமைப்பு கொண்ட ரசிகர் படையைப் பெற்றிருப்பவருமான மகேஷ் பாபு, ‘ஓ மை கடவுளே’ படத்தின் புதுமையான கதையம்சத்தையும், உணர்ச்சிகரமான சுவை மிக்க காட்சியமைப்புகளையும் வெகுவாகப் பாராட்டியிருப்பதுதான். இது குறித்து ஆக்சஸ் பிலிம் பேக்டரியைச் சேர்ந்த படத்தயாரிப்பாளர் டில்லி பாபு கூறியதாவது… “மகேஷ் பாபுவைப் போன்ற சூப்பர் ஸ்டார் ‘ஓ மை கடவுளே’ படத்தைப் பாராட்டியிருப்பதை உண்மையில் […]

Continue Reading

நடிகர் அருள்நிதியின் ‘டைரி’!

தனித்துவம் மிக்க கதைக் களத்தில், தனது பாத்திரப்படைப்பு மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறதா என்பதை மிகுந்த ஆர்வத்துடன் கவனமாகத் தேர்வு செய்து நடிப்பதுதான் நடிகர் அருள்நதியின் வழக்கம். அதனால்தான் அவர் பாராட்டப்படும் கலைஞனாக இருப்பதுடன், அவரது படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் தேடித்தருவனவாகவும் அமைகின்றன. தொடர் வெற்றிகளை ஈட்டி வரும் அருள்நிதி தற்போது நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ‘டைரி’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை (21-07-2020) வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய இன்னாசி […]

Continue Reading

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று..(ஜூலை 21)

தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர் என்றால், நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று கூறலாம். ஒரு பாத்திரத்திற்கு உயிர் கொடுக்க எப்படிப்பட்ட நடிப்பை கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு, அந்த பாத்திரமாக மாறி நடிப்பதில் இன்றளவும் அவருக்கு இணையாக யாரும் தோன்றவில்லை என்றே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட திரையுலக நடிப்பு மாமேதை சிவாஜி கணேசன் அவர்களின் 16வது நினைவு தினம்தான் இன்று என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் கணேசனாக இருந்த அவர் “சிவாஜி கண்ட […]

Continue Reading

வேலூர் பழைய ஆனந்தா ஜோதி திரையரங்க உரிமையாளர் மரணம் – டி. ராஜேந்தர் இரங்கல்

வேலூர் பழைய ஆனந்தா ஜோதி திரையரங்க உரிமையாளர் திரு.லோகநாதன் அவர்கள் நேற்று (20 ஜுலை) இயற்கை எய்தியதாக வந்த செய்தி என்னை பெரும் துயரத்தில் ஆழ்தியது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். இப்படிக்கு, டி. ராஜேந்தர் M.A, திரைப்பட இயக்குனர் / தலைவர், சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.

Continue Reading

பலநூறு பேர்களுடன் நடைபெறும் ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண்டு எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது.

இதுபற்றி கட்டில் திரைப்பட இயக்குனரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது. விஜய் நடித்த சிவகாசி, அஜித் நடித்த ஆழ்வார், மற்றும் M.குமரன் Son of மஹாலெட்சுமி போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த்தேவா எனது கட்டில் திரைப்படத்திற்கு இசை அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது. ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள், இயக்குனர்கள், நடிகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்கள் சூழ ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு கொண்டாட்டங்களைத் தவிர்த்து எளிமையாக எனது கட்டில் திரைப்பட பாடல் பணிகளுக்கிடையே இன்று […]

Continue Reading