சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் ‘குஷி’- இரண்டாவது சிங்கள் ‘ஆராத்யா’, ஒரு மெலோடியான காதல் பாலட், இப்போது வெளியாகி இருக்கிறது.

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரூத் பிரபு நடிப்பில் உருவாகி வரும் ‘குஷி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இரண்டாவது சிங்கிளான ‘ஆராத்யா’வை வெளியிட்டனர். ‌ப்ரமோவில் உறுதியளித்தபடி, இது திருமணத்திற்கு பிறகு முதன்மையான நாயகனுக்கும், நாயகிக்கும் இடையே ஒரு மாயாஜால காதல் பாடலாக இருக்கும்.

இந்த காதல் பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி போன்ற பரபரப்பான பாடகர்கள் பாடியுள்ளனர்.’ நீ என் சூரிய ஒளி.. நீயே என் நிலவொளி.. நீ வானத்தில் நட்சத்திரங்கள்.. இப்போது என்னுடன் வா உனக்கு என் ஆசை…’ என்ற மந்திர வரிகளுடன் பாடல் தொடங்குகிறது. அது மெதுவாக நம்மை குஷியின் காதல் மண்டலத்திற்கு அழைத்துச் செல்கிறது.

மெல்லிசை பாடல்கள் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே உள்ள நிபந்தனையற்ற அன்பை விளக்குகிறது. திருமணத்திற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கையை காட்டுகிறது. விஜய் தேவார கொண்டா மற்றும் சமந்தாவின் கெமிஸ்ட்ரி இனிமையான மெட்டினைப் போலவே மாயாஜாலமாக இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் அன்பை வெளிப்படுத்த விரும்பும் அனைத்து காதலர்களுக்கும் இது ஒரு கீதமாக இருக்கும்.

‘ஹிருதயம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற ஹே ஷாம் அப்துல்லா வஹாப் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். இதனை தமிழ் மற்றும் தெலுங்கில் சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர். படத்தின் இயக்குநர் சிவ நிர்வாணா தெலுங்கு பாடல்களை எழுத, மதன் கார்க்கி தமிழ் பாடல்களை எழுதி இருக்கிறார்.

இந்தி பதிப்பில் ஜூபின் நௌடியல் மற்றும் பாலக் முச்சல் ஆகியோர் பாடியுள்ளனர். கன்னட மதிப்பில் ஹரிசரண் சேஷாத்திரி மற்றும் சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர். மலையாள பதிப்பில் கே. எஸ். ஹரிசங்கர் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். ஒவ்வொரு பதிப்பிலும் உணர்வும், மந்திரமும் அப்படியே இருக்கும்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ‘குஷி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, முரளி சர்மா, ஜெயராம் சச்சின் கெடகர், சரண்யா பிரதீப், வெண்ணலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *