மீண்டும் இணையும் ‘ஈரம்’ பட வெற்றிக் கூட்டணி

சினிமா செய்திகள்

ஆல்பா பிரேம்ஸ் இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” திரைப்படம் நேற்று (டிசம்பர் 14, 2022 ) பூஜையுடன் இனிதே துவங்கியது.
தமிழ் திரையுலகில் ஈரம் என்ற தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். ஈரம் படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இப்படத்தில் இணைகிறார். ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஹாரர் திரில்லராக உருவாகவுள்ள இந்த படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, நேற்று (டிசம்பர் 14, 2022 ) இனிதே நடைபெற்றது. படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *