ஒரு ஆணோட கோபத்தை விட ஒரு பெண்ணோட அமைதி தான் ஆபத்து -ஜோதி பட செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் பேச்சு

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஜோதி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு ஜோதி படத்தை திரையிட்டனர். படம் முடியும் வரை மிகவும் அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள், படம் முடிந்ததும் பலத்த கரகோஷம் எழுப்பினர். அதுவே ஒரு நல்ல படத்திற்கான அடையாளமாக காணப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் A.V.கிருஷ்ண பரமாத்மா, இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், துணை நடிகர் ஹரி க்ரிஷ், தயாரிப்பாளர் S.P.ராஜா சேதுபதி மற்றும் இந்த உண்மை சம்பவத்தில் […]

Continue Reading

சோனி லைவ் டிவியில் புதிய வெப் தொடர் ‘தி மெட்ராஸ் மர்டர்’ 1940-ல் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் கொலை பற்றிய கதையா?

OTT தளமான “SONYLIV” தனது புதிய தமிழ் வெப் தொடருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, “THE MADRAS MURDER” (தி மெட்ராஸ் மர்டர்) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரினை சூரியபிரதாப்.S, எழுதி-இயக்க, BIGPRINT PICTURES சார்பாக I.B.கார்த்திகேயன் தயாரிக்கிறார். இயக்குனர் A.L.விஜய் SHOWRUNNER-ஆக செயல்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வெப் தொடர் 1940-களில் மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த ஒரு பிரபல கொலை வழக்கினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாராக […]

Continue Reading

வார்டு-126 பட விமர்சனம்

நடிப்பு: மைக்கேல் தங்கதுரை, ஜிஷ்னு மேனன், ஷிரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா தயாரிப்பு: எஸ்.எஸ்.பி. டாக்கிஸ் இசை: வருண் சுனில் ஒளிப்பதிவு: எஸ்.கே.சுரேஷ்குமார் இயக்கம்: செல்வகுமார் செல்லப்பாண்டியன். வார்ட் எண் 126 பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் துர்நாற்றம் வீச, பக்கத்து வீட்டு நபர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கிறார். போலீஸ் வந்து பார்க்கும்போது மைக்கேல் என்ற வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டு இரண்டு நாள் ஆனது தெரிய வருகிறது. பிணத்தை கைப்பற்றி அக்கம்பக்கத்தாரிடம் […]

Continue Reading

ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி

ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி – ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டு விழா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு 44-வது ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் 6 உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஜூலை 25-ந்தேதி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியதுடன், வேலம்மாள் பள்ளியின் செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு பள்ளியின் சார்பில் […]

Continue Reading

“வட்டம்” திரைப்படம் பத்திரிக்கையாளர் சந்திப்பு

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக, உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. இதனை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் SR பிரபு கூறியதாவது.., கமலகண்ணன் இயக்கிய மதுபான கடை திரைப்படம் எனக்கு […]

Continue Reading

லத்தி படத்தின் டீஸரைப் பார்த்தால் விஷால் திரைக்கு வெளியே வந்து அடித்து விடுவார் போல இருக்கிறது; நிறைய அடிபட்டு நடித்திருக்கிறார்! – உதயநிதி ஸ்டாலின்

வரலாற்று படைக்கும் நடிகர் சங்க கட்டிடத்தில் கலைஞர் ஐயா மற்றும் ஸ்டாலின் ஐயா பெயரும் இடம்பெற வேண்டும் – உதயநிதியிடம் விஷால் கோரிக்கை இப்படத்தின் டீஸர் வெளியானதும் பார்க்கிறேன்; எனக்கும், விஷாலுக்கும் வாழ்த்துக்கள் கூறினார் நடிகர் விஜய் – நடிகை சுனைனா தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்ஷன்ஸ் […]

Continue Reading

திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ஸ்ருதிஹாசன்

நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில் நடித்து பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். கமல்ஹாசன் – சரிகா தம்பதிகளுக்கு மூத்த வாரிசாக பிறந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹே ராம் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், 2009 ஆம் ஆண்டில் நடிகர் இம்ரான் கான் ஜோடியாக ‘லக்’ எனும் இந்தி […]

Continue Reading

அமேசான் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, ஐந்து தேசிய விருதுகளை வென்ற, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’

கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் 2022 அறிவிக்கப்பட்டது. இதில் அமேசான் டிஜிட்டல் தளத்தில் வெளியான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (சூர்யா) மற்றும் சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட அனைத்து மொழிப் பிரிவுகளிலும் ஐந்து விருதுகளை வென்றுள்ளது. சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜசேகர் பாண்டியன் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா, […]

Continue Reading

ஓடிடியில் ‘ராக்கெட்ரி’

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும், விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணன் வாழ்க்கையை ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட்’ என்ற பெயரில் படமாக இயக்கி, நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்தும் உள்ளார் மாதவன். ஜூலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகப் பிரபலங்களும் படத்தை பாராட்டினர். படத்தை பார்த்த ரஜினி உள்ளிட்டதிரையரங்க பிரபலங்கள் பலரும் மாதவனை பாராட்டினர். இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ஒரு மாதம் கழித்து […]

Continue Reading

‘‘திரில்லர் ஜானரில் ‘‘பொய்க்கால் குதிரை படத்தை இயக்கியிருக்கிறேன்…’’ -இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் கூறுகிறார்

‘ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயல்பாக நான் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை” என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை […]

Continue Reading