இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்த ‘சேத்துமான் ‘ திரைப்படம் மே 27ம் சோனி லைவ் வில் வெளியாகிறது.

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக திரைப்படங்கள் தயாரித்துவருகிறார். பரியேறும் பெருமாள், குண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டாபரம்பரை , உள்ளிட்ட படங்கள் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தன. இந்நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி எனும் சிறுகதை “சேத்துமான்” எனும் பெயரில் திரைப்படமாக தயாரிக்க நீலம் புரொடக்சன்ஸ் முன்வந்தது. அறிமுக இயக்குனர் தமிழ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனத்தை எழுத்தாளர் […]

Continue Reading

ஆர்.கே.சுரேஷ்-கயல் ஆனந்தி ஜோடி போடும் ‘ஒயிட் ரோஸ்’ படத் தொடக்க விழா

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படமான இதில் ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் கயல்ஆனந்தி. இன்னொரு நாயகனாக தயாரிப்பாளர் ரூஸோ நடிக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு இசை ஜோஹன் ஷிவனேஷ். வைரமுத்து பாடல்களை எழுத, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை டி.என்.கபிலன் […]

Continue Reading

இயக்குநர் வசந்தபாலனின் ‘அநீதி’ படப்பிடிப்பு நிறைவு

கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ், நாயகியாக துஷாரா விஜயன் தேசிய விருது பெற்ற G.வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி வந்த ‘அநீதி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘கைதி’ ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்து பெரும் கவனம் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். விருதுநகரில் தன்னுடன் […]

Continue Reading

நடிப்பில் உருவான கேன்ஸ் திரைவிழாவில் Top Gun Maverick திரைப்பட திரையிடலில் Tom Cruiseக்கு கௌரவ Palme d’Or விருது வழங்கப்பட்டது!

கேன்ஸ் திரைவிழாவில் Top Gun Maverick திரையிடப்பட்டபோது பார்வையாளர்கள் 6 நிமிட எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தினார்கள் ! Paramount Pictures தயாரிப்பில் உருவான Top Gun Maverick திரைப்படத்தை இந்தியாவில் Viacom18 Studios நிறுவனம் மே 27 அன்று தியேட்டரில் வெளியிடுகிறது . Paramount Pictures மற்றும் Skydance & Jerry Bruckheimer Films வழங்கும், Don Simpson / Jerry Bruckheimer தயாரிப்பில், Joseph Kosinski இயக்கத்தில், Tom Cruise நடித்துள்ள திரைப்படம் “Top […]

Continue Reading

படம் தயாரிக்க உதவும் சாப்ட்வேர் மூலம் கச்சிதமாக உருவான ‘விஷமக்காரன்’

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்ததோடு படத்தையும் இயக்கி இருக்கிறார், வி (விஜய் குப்புசாமி). அனிகா விக்ரமன் மற்றும் வலிமை புகழ் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். வரும் மே-27ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது. பொதுவாகவே ஒரு வெற்றிப்படத்திற்கான கதை எப்படி இருக்க வேண்டும், அதற்கான பட்ஜெட் எந்த அளவுக்குள் இருக்கவேண்டும் என்பதை கணிப்பதில் தான் பலர் கோட்டை விடுகின்றனர். ஆனால் இந்தப்படத்தின் இயக்குனரான வி, […]

Continue Reading

டேக் டைவர்ஷன் பட விமர்சனம்

பார்த்த பெண்களையெல்லாம் நொட்டை சொல்லி கழித்து வந்த சிவகுமாருக்கு ஒருவழியாக முதலில் பார்த்த பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகிறது. மாலை பாண்டிச்சேரியில் நடக்க இருக்கும் நிச்சயதார்த்தத்துக்கு சென்னையில் இருந்து கிளம்ப ரெடியாகும் சிவகுமாரை அழைத்த அவரது மேலாளர் முக்கியமான வேலை ஒன்றை கொடுக்கிறார். அந்த வேலையை செய்யாவிட்டால் தனது வேலை பறிபோகும் அபாயத்தை உணர்ந்த சிவகுமார், அந்த வேலையை முடிக்க களத்தில் இறங்குகிறார். அதற்காக இளம்பெண் பாடினி குமாரை சந்திப்பதோடு, அவரால் பிரச்சனையிலும் சிக்கிக்கொள்கிறார். பிரச்சினையில் இருந்து விடுபட […]

Continue Reading

‘‘எந்த மொழியை கற்றுக்கொண்டாலும் தாய்மொழியை விட்டு விடாதீர்கள்’’ -விக்ரம் படவிழாவில் நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள்

கமல் நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவாகியிருக்கும் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் சிலம்பரசன், விஜய் சேதுபதி, நரேன், உதயநிதி, இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் ரஞ்சித் பேசுகையில், இளம் இயக்குநர்களோடு கமல்ஹாசன் இணைந்து பணியாற்றுவதை முக்கியமானதாக பார்க்கிறேன். லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முந்தைய படங்களில் தன்னை நிரூபித்து இருப்பதாக கூறினார். மேலும், “தமிழ் சினிமாவில் கண்டெண்ட் […]

Continue Reading

நெஞ்சுக்கு நீதி பட விமர்சனம்

பொள்ளாச்சி பகுதியில் மூன்று பள்ளி சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அவர்களில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்படுகிறார்கள். மற்றொரு சிறுமி காணாமல் போகிறாள். அந்த வழக்கை புதிதாக பணிக்கு வந்திருக்கும் டி.எஸ்.பி. உதயநிதி ஐ.பி.எஸ். விசாரிக்கிறார். அந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமையின் பின்னணி என்ன? அவர்களை உதயநிதி கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? கேள்விகளுக்கு திருப்புமுனை தரும் விடையே ‘நெஞ்சுக்கு நீதி.’ போலீஸ் அதிகாரி வேடத்தில் உதயநிதி கச்சிதம். சிறுமிகள் வழக்கை கையில் எடுத்தபிறகு கொஞ்சமும் மிகையில்லாத அவரது […]

Continue Reading

கான்ஸ் பட விழாவில் வெளியான பா.ரஞ்சித் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் பா.ரஞ்சித் எழுதி இயக்கும் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது. இயக்குனர் பா.ரஞ்சித் படங்கள் இயக்குவதோடு தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் தயாரிப்பில் இதுவரை ‘பரியேறும்பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால்’ உள்ளிட்ட படங்கள் வெளிவந்தன. தொடர்ந்து ‘சேத்துமான், பொம்மை நாயகி, ஜெ.பேபி’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. இந்நிலையில் […]

Continue Reading

‘‘அழகான பெண்கள் தமிழ் பேசினால் தமிழ் மொழி அழியாது…’’ இயக்குனர் பேரரசு ‘கலகல’ பேச்சு

ஷிவானி ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும்படம் ‘டேக் டைவர்ஷன்’. கே.ஜி.எஃப் படப்புகழ் நடிகர் சிவகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வருவதையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் பேரரசு, இயக்குநர் ‘எத்தன்’ சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேசுகையில், ‘‘இப்படத்தின் கதாநாயகன் சிவகுமார், தமிழ் சினிமாவின் ‘என்றும் மார்க்கண்டேயன்’ ஆன சிவகுமாரைப் போல் […]

Continue Reading