சினிமா செய்திகள்செய்திகள்

எஸ்.ஜெ.சூர்யாவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தினால் கௌரவ டாக்டர் பட்டம்!

திரைத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜெ.சூர்யா அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம், கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.

சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 – வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா கலந்து கொள்கிறார். இதில் இளங்கலை, முதுகலை, மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என சுமார் 5 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரபல இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்ட திரு. எஸ்.ஜெ.சூர்யா அவர்களுக்கு 25 வருடங்களாக திரைத்துறைக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கவிருக்கிறது. வாலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தென் இந்திய அளவில் சிறந்த நடிகராக வலம் வரும் திரு எஸ் ஜே . சூர்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்குவதில் பெருமை கொள்கிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.

அதேபோல பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளில் உலக அரங்கில் சாதிக்க வழிகாட்டியாக இருந்த பயிற்சியாளர் திருமிகு புல்லேலா கோபிசந்த் அவர்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவிருக்கிறது.

இவர் இந்தியாவில் பெரிதும் பிரபலமடையாத பேட்மிண்டன் விளையாட்டில் கால்பதித்து சாதித்ததோடு தன் மாணவர்களையும் வெற்றி கனியை எட்ட உத்வேக படுத்தினார். இவரின் இந்த சாதனையை பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் வழங்கியுள்ளது . இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் பெருமை கொள்கிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.

அதேபோல் தொழில்துறையில் குறுகிய காலத்தில் 700 கடைகளுடன் உலகளவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார், நேச்சுரல்ஸ் குழும அழகு நிலையங்களின் உரிமையாளர் திரு.சி.கே.குமரவேல். 1000 பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவதே லட்சியமாக கொண்டு செயல்பட்டுவரும் திரு சி கே . குமரவேல் அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் பெருமை கொள்கிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.

2008 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் MHRD ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட VISTAS, சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் மூன்று வளாகங்களைக் கொண்ட தமிழ்நாட்டின் பல்துறைப் பல்கலைக்கழகம் என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. மருத்துவம், நர்சிங், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண்மை, கடல்சார் ஆய்வுகள், சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் UG முதல் Ph.D வரையிலான திட்டங்களை வழங்குகிறது . இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் மேலும் ஒரு சாதனையாக மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவால் NAAC A++ தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *