ஓட்டுக்கு பணம்.. நாட்டை விற்பதற்கு சமம்.. – இயக்குனர் பேரரசு
இன்று தமிழகத் தேர்தலில் மிகவும் நேர்மையான தலைவர் வந்தாலும், மக்களை உண்மையிலேயே நேசிக்கிற தலைவன் வந்தாலும் வெற்றியடைவது மிகவும் சிரமம்.
காரணம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், ஓட்டுக்கு பணம் வாங்குவதுமான கேடுகெட்ட கலாச்சாரம் பெருகிவிட்டது.
ஊழல்வாதிகளை அடையாளம் காட்டுவதாலோ, மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைப்பதாலோ ஒரு கட்சியை பலவீனப்படுத்திவிட முடியாது.
ஓட்டுக்கு பணம் எனும் பெரும் ஊழலில் அரசியல்வாதிகளும், மக்களும் மூழ்கி ஜனநாயகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்துக் கொண்டிருக்கும்போது நேர்மையாவது,தூய்மையாவது?
எவன் பணம் கொடுக்கிறான் ? இதில் ஆர்வமாய் உள்ள மக்கள் அவன் எப்படிப்பட்டவன் என்பதை ஆராய்வதில்லை என்பது ஜனநாயக அபாயம்!
பதவியில் இருந்த அரசியல்வாதிகளின் ஊழலை நிரூபிப்பது ஒருபுறம் இருந்தாலும்,
ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும்,வாங்குவதையும் இரும்புக்கரம் கொண்டு முற்றிலும் தடுத்தால்தான் இனி சரியான மனிதர்கள், தலைவர்கள் வெற்றியடைய முடியும். ஓட்டிலே ஊழல் துவங்கும்போது பின் நாட்டில் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்.
*ஓட்டுக்குப் பணம்!
நாட்டை விற்பதற்கு சமம்!!*
—இயக்குனர் பேரரசு