திரை விமர்சனம்

குப்பையில் காதல் செடி.. – புது வேதம் விமர்சனம் 3/5…

விக்னேஷ் சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்தவர். தாயின் வளர்ப்பில் வளரும் போது தாய் வேறொருவனை காதலித்து ஓடி செல்கிறார். இதனால் அனாதையாகும் விக்னேஷ் குப்பை மேட்டில் வளர தொடங்குகிறார்.

அதே குப்பைமேட்டில் அவருக்கு ஆதரவாக நிற்கிறார் ரமேஷ். இவர் இரு கால்களை இழந்த மாற்றுத்திறனாளி. இவர்களுடன் இன்னும் சில சிறுவர் சிறுமியரும் அந்த குப்பைமேடு அருகே குடிசை கட்டி வாழ்கின்றனர்.

ஒரு கட்டத்தில் தங்களுடன் வளரும் வருணிகா மீது காதல் கொள்கிறார் விக்னேஷ். ஆனால் குப்பை லாரி ஓட்டும் டிரைவரைக் காதலிக்கிறார் வருணிகா.

இந்தக் கதை ஒருபுறம் இருக்க மற்றொரு புறம்…. குப்பையில் கிடைக்கும் பழைய மாத்திரைகளை புதியது போல் மாற்றி வியாபாரம் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார் இமான் அண்ணாச்சி.

இறுதியில் என்ன ஆனது.? விக்னேஷ் – வருணிகா காதல் கைகூடியதா.? இமான் அண்ணாச்சி மாட்டிக் கொண்டாரா.? குப்பை மேடு சிறுவர் சிறுமியரின் வாழ்க்கை தரம் உயர்ந்ததா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த விக்னேஷ் & ரமேஷ் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். அந்தப் படத்தில் பார்த்த அதை குழந்தை முகம் வெள்ளந்தி சிரிப்பு என்பதை இந்த படத்திலும் கொடுத்திருப்பது சிறப்பு.. விக்னேஷின் காதல் பக்கங்கள் குப்பை மேட்டின் பூச்செடியாக வாசம் வீசுகிறது.

குப்பை மேட்டில் வளர்ந்த சிறுமியின் நடிப்பை பிரதிபலிக்கிறார் நாயகி வருணிகா.

குப்பை மேட்டில் வியாபாரம் பார்த்து பணக்காரனாக மாறிய கேரக்டரில் இமான் அண்ணாச்சி. இளம் அழகிகளுடன் இவர் ஆடிப் பாடுவது இவருக்கு உடம்பு எல்லாம் மச்சம் என்று உச்சுக் கொட்ட வைக்கிறது.

பட்டணத்தில் வேலை செய்கிறேன் என்ற சொல்லிவிட்டு குப்பை மேட்டில் பொறுக்கும் கதாபாத்திரத்தில் சிசர் மனோகர்.

இந்தக் காட்சிகளை மீறி சில நெகிழ்ச்சியான காட்சிகளையும் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

தன்னுடைய காணாமல் போன கொலுசு தான் என்று தெரிந்தும் நாயகி வருணிகா அதை வாங்காமல் அவர்கள் பசியாறட்டும் என்று நினைப்பது உயர்ந்த உள்ளம். அதே சமயம் அதை கொலுசில் சாப்பிடாமல் செயற்கை கால்களை நண்பனுக்கு வாங்கி பரிசளிப்பது மனித நேயம் மனம்.

தன் காதலி இன்னொருவனால் கைவிடப்பட்ட நிலையில் தாங்கிப் பிடிப்பது விக்னேஷ் சிவனின் நடிப்பை வியக்க வைக்கிறது. கிளைமாக்ஸில் பிரிந்து சென்ற தன் அம்மாவை பார்ப்பதும் ஒரு நெகிழ்ச்சியான உணர்வு.

ஏழைகளுக்காக 2 ரூபாயில் வைத்தியம் பார்த்த மருத்துவரையும் இதில் நடிக்க வைத்துள்ளார்.

நாம் சாலைகளில் கடக்கும்போது குப்பைமேட்டை பார்த்தாலே ஒதுங்கி செல்லும் நிலையில் சினிமாவிற்காக என்றாலும் அதனுடன் இத்தனை நாட்கள் குப்பை மேட்டில் கிடந்து அதற்காக உழைத்த அனைவரையும் உச்சிமுகர பாராட்டனும்.

இயக்குனர் : ராசா விக்ரம்‌.

இசை : ரபி தேவேந்திரன்‌

ஒளிப்பதிவு : கே.வி.ராஜன்

படத்தொகுப்பு : நவீன் குமார்

தயாரிப்பு : விட்டல்‌ மூவிஸ்‌ நிறுவனம்

அதேசமயம் குப்பை மேட்டில் வளர்ந்த இந்த சிறுவர்கள் நாம் பேசும் சரளமான மொழியை பேசுவது ஏதோ அந்நியப்பட்டு நிற்கிறது. உணர்வுபூர்வமான கதையை கொடுத்த இயக்குனர் இன்னும் இயல்பு தன்மை மாறாமல் காட்சிகளை படமாக்கி இருந்தால் இந்த வேதம் ரசிகர்களுக்கு பிடித்த வேதமாக இன்னும் மாறி இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *