நடிப்பு: யூனஸ் ,எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு, மனோகரன், வில்லனாக தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி

தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films ) நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ,’ஐமா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்

இசை: கே ஆர்.ராகுல்

ஒளிப்பதிவு: விஷ்ணு கண்ணன்

எடிட்டிங் அருண் ராகவ்,

இயக்கம்: ராகுல் ஆர்.கிருஷ்ணா

 

ஆதாம் (யூன்ஸ்) தன் தாயின் சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் சேர்க்கிறான். அதேநேரத்தில் விபத்தில் சிக்கிய மரியா (எல்வின் ஜூலியட் ) அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கிறாள்.

இவர்கள் இருவரையும் கடத்தி ரகசிய இடத்தில் அடைக்கின்றனர் வில்லன் கோஷ்டி.

வாயை மூடி கை கால் கட்டப்பட்டு கிடக்கும் அவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயல்கின்றனர்.

வில்லனின் திட்டம் என்ன? இருவரையும் ஏன் கடத்தினான்? என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

நாயகனாக யூனஸ் ஸ்மார்ட்டான இளைஞராக வருகிறார். நிறைய காட்சிகளில் நடிகர் விஜய்யை நினைவூட்டுகிறார். நடிப்பில் ஓகே தான்.

நாயகனைவிட நாயகி கட்டை அவிழ்க்கும் காட்சி செம. எவ்லின் ஜூலியட் நல்ல முக பாவனங்களைக் காட்டியுள்ளார்.

வில்லனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி குறையில்லாத வில்லத்தனம் காட்டுகிறார். இவர் இவர் சில நேரம் பார்ப்பதற்கு ஜவான் விஜய் சேதுபதி போல இருக்கிறார்.

“இவன் அவனில்லை அவ இவனில்ல” என்ற பாணியில் ஒரு வசனம் பேசி பொடி வைக்கிறார் வில்லன் சண்முகம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஐமா என்றால் கடவுள் சக்தி என்று பொருள்

திரில்லர் படம் என்பது தொடக்கத்திலேயே தெரிகிறது. பின்னர் சைன்ஸ் பிக்ஷனாக மாறுகிறது.

ஒரு சீனில் ஹீரோவுக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்து சடன் கிக் ஏற்றுகிறார் ஜூலியட்.

கே ஆர்.ராகுல் இசையில் படத்தில் மொத்தம் 10 பாடல்கள். இந்த காலத்தில் அதுவும் சஸ்பென்ஸ் த்ரில்லரில் 10 பாடலா? என்றால் கிளைமாக்ஸ் முடிந்த பிறகும் பாடல் தொடர்கிறது.

ஒளிப்பதிவாளர் விஷ்ணு கண்ணன் சின்ன அறையில் காட்சிகளை படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. எங்கும் போர் அடிக்காமல் டாப் ஆங்கிள் லோ ஆங்கிள் என ரசிக்க வைத்திருக்கிறார்.

இயக்குநர் ராகுல் ஆர்.கிருஷ்ணா 10க்கும் குறைவான நடிகர்களை வைத்து இயக்கியிருப்பது வித்தியாசமான சிந்தனை. ஹாலிவுட் சைன்ஸ் பிக்ஷன் பாணியில் கதையை சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால் காட்சிகளில் இன்னும் விறுவிறுப்பு இருந்திருக்கலாம்.

ஐமா – மனித வலிமையில் கடவுள்