திரை விமர்சனம்

நிலை மறந்தவன் பட விமர்சனம்

மலையாளத்தில் ‘ட்ரான்ஸ்’ என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் ‘நிலை மறந்தவன்.’
கன்னியாகுமரியில் வறுமையின் பிடியில் வாழும் பகத்பாசில் தனக்கான லட்சியம் ஒன்றை வைத்திருக்கிறார். அந்த லட்சியத்தைத் தாண்டி அவருக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. அந்த வாய்ப்புக்குப் பின்னால் இருக்கும் வஞ்சம், மத அரசியல் ஆகியவற்றின் கலவையே அதிரடி கதைக்களம்.
படத்தில் நடிப்பால் நிறைந்து நிற்கிறார், பகத்பாசில். வறுமையின் பிடியில் வாழும் இளைஞனாகவும், மதபோதகரான பின் கோடீஸ்வரனாகவும் உடல் மொழியில் அத்தனை மாற்றங்கள். குறிப்பாக கிளைமாக்சில் இவரது நடிப்பு மணிமகுடம்.

நஸ்ரியா கொடுத்த வேடத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறார். வில்லத்தனத்தில் கெளதம் மேனனும் செம்பான் வினோத்தும் கொடி கட்டுகிறார்கள். விநாயகன் இ்ன்னொரு சிறப்பு நட்சத்திரம்

மலையாளத்தில் ‘ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல்’ என சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய அன்வர் ரஷீத் இயக்கியுள்ளார்.படத்தை வேகமாக சொல்லும் வித்தை இவருக்கு வாய்த்த வரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *