சினிமா செய்திகள்

இரண்டாம் குத்து – தயாரிப்பாளர்கள் இரண்டாம் குத்து படத்தை வெளியிட வேண்டாம் தயாரிப்பாளர் முருகானந்ததிடம் வலியுறுத்துகிறார்கள்..

அதே சமயம் திரையரங்க உரிமையாளர்கள் வெளியிட சொல்லி வலியுறுத்துகிறார்கள்…

இப்போது என்ன முடிவு முருகானந்தம் எடுப்பார் தயாரிப்பாளர்கள் பக்கமா..?
திரையரங்க உரிமையாளர்கள் பக்கமா..?? — இது கேள்வி…??

உண்மையில் யார் பக்கமும் தனியாக முகத்தைக் காண்பிக்கவில்லை அவர் சூழ்நிலையில் இருந்து யோசித்தால் -அதாவது முருகானந்தம் 8 மாதத்திற்கு முன்னரே வாங்கிய படம் இது வட்டி கட்டி வருகிறார், பல கோடி நஷ்டபட்டு கடன் வாங்கி தான் சினிமா தொழில் செய்து வருகிறார்,

ஒருவேளை இரண்டாம் குத்து படத்தை தீபாவளிக்கு வெளியிடவில்லை என்றால்..
பல கோடி நஷ்டத்தை சந்திக்க நேரிடும் தன்னை நம்பி பணம் கொடுத்த பைனான்ஸியரிடம் பணத்தை திருப்பி தரமுடியாது.. அவரின் தொழில் மிகவும் பாதிக்கப்படும்…

சரி VPF பிரச்சனை எப்போது முடியும்..??
என்ன தீர்வு கிடைக்கும்..??
எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்…??
எதற்கும் தெளிவான பதில் இல்லை….

ஒருவேளை இரண்டு மாதம் கழித்து VPF பிரச்சனை முடிந்தாலும் இரண்டாம் குத்து படத்தை அன்றைய தேதியில் இதே விலைக்கு விற்று வெளியிட முடியுமா என்பது கேள்வி குறி…..

இது ஒரு தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களின் பிரச்சனை மட்டும் அல்ல இன்னும் 2 மாதம் இந்த போராட்டம் நீடித்தால் பல தயாரிப்பாளர்கள் இதுபோல பாதிக்கப்படுவார்கள்…

தயாரிப்பாளர்களும் திரையரங்க உரிமையாளர்களும் வீம்பு சண்டை போடாமல் மீண்டும் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சுமூக பேச்சுவார்த்தை நடத்தி அனைவரின் சம்மதத்தோடு தீபாவளிக்கு படத்தை வெளியிட வழிவகை செய்ய வேண்டும்….

நன்றி…

(ரஜினி சொன்னது போல்
“இரண்டாம் குத்து இப்போ இல்லனா.. எப்பவுமோ இல்லை”)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *