திரை விமர்சனம்

Deadpool & Wolverine – விமர்சனம்

எக்ஸ் மென் பட வரிசையில் இது 11வது படமாகும்.. எக்ஸ்-மென் வரிசையைப் பார்க்காதவர்களுக்கு இந்தப் படம் ரசிக்கவே முடியாமல் புரியாமல் கூட போகலாம்..

கதை…

எரிபொருள் டேங்கிற்குள் தீ வைத்து வேட் வில்சன் தற்கொலை செய்ய முயல்கிறார்.. அப்போது முதல் படம் தொடங்குகிறது…

பொதுவாகவே ஆங்கில படங்களை டப்பிங் செய்யும் போது தமிழில் ஏகப்பட்ட வசனங்கள் தமிழ் ரசிகர்களின் ரசனைக்காக காமெடிக்காக சேர்க்கப்படும்..

இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.. காமெடி என்ற பெயரில் அடல்ட் ஒன்லி ஜோக்குகளை வைத்து குழந்தைகளை பார்க்க விடாமல் செய்து விட்டனர்.. அதிலும் ஏகப்பட்ட கேரக்டர்கள் பேசுகிறது பேசுகிறது.. பேசிக் கொண்டே இருக்கிறார்கள்..

கேன்சர் நோயாளி வேட் வில்சன் (ரையான் ரெனால்ட்ஸ்), தன் காதலியோடு (மொரேனா பாக்கரின்) குழந்தை பெற திட்டமிடுகிறான்.

அதற்குள் அவரின் காதலியை எதிரிகள் கொன்றுவிட, தானும் இறக்க Suicide முடிவு செய்கிறான் வேட்.

ஆனால், மற்றொரு எக்ஸ் மேன் கொலாசஸ் அவனைக் காப்பாற்றிவிடுகிறார். எனவே எக்ஸ் – மென் குழுவில் இணைகிறான் வேட்.

அந்த நேரத்தில் எனர்ஜிட்டிக் ரஸ்ஸல் ஜூலியன் டெனிசன்னை கட்டுப்படுத்த அவனை ஐஸ் – பாக்ஸ் ஜெயிலில் அடைக்கிறது அரசாங்கம்.. எனவே சிறுவனைச் சமாதானப்படுத்த வேட்-டும் ஒருவனைக் கொன்றுவிட, அவனும் சிறுவனுடன் சேர்ந்து ஐஸ் – பாக்ஸில் அடைக்கப்படுகின்றனர்.

இந்த கட்டத்தில் டெட்பூல் இந்த உலகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று avengers டீம்-ல் சேர செல்கிறார். அங்கு அவர் நிராகரிக்கப்படவே வேறு வழியின்றி சேல்ஸ் வேலைக்கு செல்கிறார்.

அங்கிருந்த டெட்பூல்-யை தூக்கிவிட்டு இந்த உலகத்தை அழிக்கப்போறோம்.. எனவே அடுத்த டைம் லைனில் உனக்கு புடிச்சது போல் இருக்கலாம் என்கின்றனர்.

ஆனால் அவரோ யுனிவர்ஸின் ஆதாரம் யார் என கண்டுபிடித்து, அவர்களை வைத்து ஹீரோ ஆகலாம் என்று நினைக்கிறார்… அந்த உலகை காப்பாற்றினாரா.? என்பதே மீதிக்கதை..

ஆக்‌ஷன் காட்சிகள் வேற லெவல் ரகம்.. அனல் பறக்கிறது.. வுல்வுரினும் சேர்ந்து மிரட்டியுள்ளார்.

இத்துடன் பாக்ஸ் ஸ்டுடியோவில் இருந்த டெட்பூல் டிஸ்னி-க்கு சென்றதை என்ன சம்பள பாக்கி வைத்து விட்டார்களா எனவும் கலாய்த்துள்ளனர்.

தமிழ் ரசிகர்களுக்கு புரியும் வகையில் நிறைய கிண்டல்கள் அடித்து இருக்கின்றனர்.. முக்கியமாக தமிழில் ஓடாத படங்கள் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என அனைத்தையும் கலாய்த்து இருக்கின்றனர்..

அதிலும் கமல்ஹாசனின் ட்விட்டர், மக்கள் நீதி மய்யம் கட்சி வரை கிண்டல் செய்கிறார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *