திரை விமர்சனம்

வா வா சூடேற்ற வா..; ரா ரா சரசுக்கு ரா ரா விமர்சனம்

ஓர் இரவு.. ஒரு லேடிஸ் ஹாஸ்டல்.. அதில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை.

ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில்ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.

லேடிஸ் ஹாஸ்டல். அதில் பல அறைகள்.. பலவிதமான அழகிகள்.. ஹாஸ்டல் வார்டன் ஆன்ட்டி..

இந்த சூழ்நிலையில் இரண்டு மூன்று பெண்கள் ஆண் விபச்சாரனை அழைத்து உடலுறவு கொள்ள நினைக்கின்றனர். அதன்படி அவர்கள் அவனையும் அழைக்கின்றனர்.

இந்த நேரத்தில் தன்னுடைய ரகசியங்களை தெரிந்த ஒரு பெண்ணை கொல்ல வில்லன் கும்பல் இரண்டு ஆண்களை அந்த ஹாஸ்டலுக்குள் நுழைய சொல்கின்றார்.

இவர்கள் எல்லாம் சந்திக்க.. அந்த ஹாஸ்டலில் நடக்கும் சம்பவங்களே இந்த படத்தின் மீதிக்கதை.

கார்த்திக், காயத்ரி பட்டேல் , கே.பி.ஒய் பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா,ரவிவர்மா, அபிஷேக், பெஞ்சமின் உட்பட பலர்நடித்துள்ளனர்.

ஆறுக்கும் மேற்பட்ட அழகிகள் நடித்துள்ளனர் என்பதை விட அழகை திணற திணறக் காட்டியுள்ளனர் என்று கூறலாம்.. முக்கியமாக அதில் ஒரு காதல் ஜோடி.. நம்மை உச்சி முதல் பாதம் வரை சூடேற்றி வைக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் லிப்லாக் ஹாலிவுட் கிஸ்..

வெறுமனே ஹாஸ்டல் பெண்கள் என்று இல்லாமல் அதற்கு பிளாஷ்பேக் காட்சி வைத்து கொஞ்சம் திருப்புமுனையை கொடுத்துள்ளார் இயக்குனர்.

கேஷவ் தெபுர் என்பவர் இயக்கியுள்ளார். இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 350 படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியவர்.

நடன இயக்குனர் என்பதால் கிளைமாக்ஸ் காட்சியில் ரா ரா சரசுக்கு ரா ரா என்ற ஒரு குத்துப் பாடலை வைத்திருக்கிறார்.. படம் ஆரம்பிக்கும் போதும் மழைக்கால குளிருக்கு இளசுகளை பெருசுகளையும் சூடேற்ற ஹாஸ்டல் அழகிகளை ஆடவிட்டு நம்மையும் ரசிக்க வைக்கிறார்.

ஜி.கே.வி இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஆர்.ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரே ஹாஸ்டலில் நடக்கும் கதையை பலவித கோணங்களில் காட்டி கவனிக்க வைக்கிறார். பாடலும் பின்னணி இசையும் சுமார் ரகம் தான்.

இயக்குநர் திரைக்கதையில் காட்டிய ஆர்வத்தை அழகிகளை தேர்வு செய்த ஆர்வத்தை கொஞ்சம் நடிப்பிலும் மெனக்கெட்டு காட்டி இருக்கலாம். அரைகுறை ஆடையில் ஆட விட்டாலும் நடிப்பில் எவரிடமும் முதிர்ச்சி இல்லை என்பது தான் வருத்தம்.

ஆண்கள் ஆஸ்டலில் நடக்கும் சம்பவங்களை கொஞ்சம் மாற்றி லேடிஸ் ஹாஸ்டலில் நடக்கும் கதைக்களமாக மாற்றி இருக்கிறார்.. CALL BOY ஆண் விபச்சாரனை அழைத்து ஜாலியாக கதை சொல்ல முற்பட்டு இருக்கிறார் இயக்குனர் கேசவ்.

இது முழுக்க முழுக்க அடல்ட் படம் என்று தெரிந்து பார்க்க சென்றவர்கள் இதை குறை சொல்வது அர்த்தம் இல்லை. எந்த லாஜிக்கும் பார்க்காமல் கொஞ்சம் குளிருக்கு நம்மை சூடேற்றிக் கொள்ளலாம்.

Rs ra Sarasukku Ra Ra movie review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *