நீதியை கையில் எடுக்கும் ஹீரோ! ‘குற்றம் புரிந்தால்’ படத்தின் அதிரடிக்கதை
அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் படம் ‘குற்றம் புரிந்தால்.’
நான் சிவனாகிறேன், இரும்பு மனிதன் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய டிஸ்னி இந்த படத்தை இயக்குகிறார்.
இஆதிக் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். பெங்களூரைச் சேர்ந்த அர்ச்சனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பாடல்களை கபிலன் மற்றும் கார்த்திக் நேதா எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு கே.கோகுல், இசை கே.எஸ்.மனோஜ்.
மர்ம நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு, மன உளைச்சலால் விரக்தி அடைந்த ஒருவன், தன் கைகளில் நீதியை எடுக்கிறான். அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறி வைக்கிறான். அவன் தண்டித்தானா, இல்லையா என்பதை காதல், செண்டிமென்ட், ஆக்ஷன் கலந்து, சமூக அக்கறையுடன் இப்படத்தை இயக்கியுள்ளேன் என்கிறார் இயக்குனர் டிஸ்னி.
படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறத்தாழ 70 படங்களுக்கு மேல் புரொடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்த ஆத்தூர் ஆறுமுகம் தயாரித்துள்ளார்.
“குற்றம் புரிந்தால்” திரைப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.