சினி நிகழ்வுகள்

அன்று தமன்னா ஜோடியாக ‘கல்லூரி’ படத்தில் வாய்ப்பு கிடைத்தும் நடிக்காமல் போன லிங்கேஷ்… இன்று ‘காலேஜ் ரோடு’ படம் மூலம் கதாநாயகனாகிறார்


நடிகர் லிங்கேஷ். பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர். இவர் நடித்த கபாலி, பரியேறும் பெருமாள் படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தாலும். கதாநாயகனாக இப்போது தான் அறிமுகமாகிறார். இவர் விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘காலேஜ் ரோடு’ படத்தின் நாயகன்.
மாணவர்களின் கல்விக் கடனை பற்றி பேசி இருக்கும் இத்திரைப்படம் மாணவர்கள் மத்தியில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் ஆவலுடன் இருக்கின்றனர். ஏற்கனவே இந்த திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் பாராட்டியுள்ளார்.
10 வருடங்களுக்கு முன் கல்லூரி படத்திற்காக எடையை குறைத்து இரண்டு வருடங்கள் திரைப்படத்திற்காக கடினமாக உழைத்த லிங்கேஷ், அந்த படத்தின் நாயகி தமன்னாவின் ஜோடியாகி இருக்க வேண்டியவர். ஆனால் அந்த வாய்ப்பு தவறிப்போக, அதன்பின்னர் தொகுப்பாளராக தன் வாழ்க்கையை கடந்து,, மெட்ராஸ், கபாலி, பரியேறும் பெருமாள், ரஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் குணசித்திர நடிகரானார். ஆனாலும் நாயகன் ஆவதே அவரது லட்சியமாக இருந்தது. அதற்கு காலேஜ் ரோடு படம் கைகொடுத்திருக்கிறது.
இன்று கல்லூரியில் படத்தில் கதாநாயகனாக நடிக்காமல் விட்டதை காலேஜ் ரோடு திரைப்படத்தில் பிடித்து நாயகனாக அறிமுகமாகிறார்.
டிசம்பர் 30 திரையரங்கில் வெளியாகும் இந்தபடத்தை பி.வி.ஆர். பிச்சர்ஸ் வெளியிடுகின்றனர்.
மாணவர்கள் சம்பந்தப்பட்ட கதை என்பதால் இந்த படத்துக்கு மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *