ஹாலிவுட் போகும் தேசியத்தலைவர் கூட்டணி ஹாலிவுட்டில் பிரபலமான ‘பிங்க் ஜாகுவார்
எண்ட்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் புதிய ஹாலிவுட் படத்திற்கு ஒப்பந்தமாகிறார் இயக்குனர் R.அரவிந்தராஜ். இந்த ஹாலிவுட் படத்தில் நாயகனாக நடிப்பவர் ஜே.எம்.பஷீர். அரவிந்த்ராஜ் இயக்கத்தில் தேசிய தலைவர் படத்தில் நாயகனாக நடித்த பஷீர், இந்த படத்தை தொடர்ந்தே ஹாலிவுட் படத்திலும் இணைகிறார்.
இந்த படத்திற்கான அறிவிப்பை நிறுவனத்தின் தலைவர் ஹிஸ் ஹைனஸ் பிரின்ஸ் ஜெகதீஷ், மேடம் ஸ்வர்ணா விரைவில் வெளியிட இருக்கிறார்கள். தேசியதலைவர் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இந்த படத்திற்கான பணிகள் மார்ச் மாதம் முதல் தொடங்க இருக்கிறது.