சினி நிகழ்வுகள்

புதிய சொகுசு குடியிருப்புகளுக்கு பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை -மகிழ்ச்சியின் உச்சத்தில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள்

திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தில் ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் புதிய சொகுசு குடியிருப்புகள் திட்டம் ‘ரூஃப்வெஸ் – நக்‌ஷத்ரா’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. 9.62 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான மற்றும் குறிப்பிடத்தக்க அமைதியான வாழ்க்கைக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட இத்திட்டம் கடந்த மே மாதம் தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் வகையில், ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் அமைதியான இயற்கை எழில் மிகுந்த தங்கும் இடங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரூஃப்வெஸ் நிறுவனம், தற்போது தங்களது திட்டத்தின் கிழ் வெளியிட்ட அனைத்து வில்லாக்களையும் விற்பனை செய்திருப்பதோடு, சொன்னது போலவே தற்போது வில்லாக்களை கட்ட தொடங்கியுள்ளது.

ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா வில்லாக்கள் திட்டத்தில் வீடுகள் வாங்கிய வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் இடங்களிலும் பாரம்பரிய முறைப்படி பூமி பூஜை நடத்தி ஒவ்வொருவருக்கும் கலசத்தையும் வழங்கியுள்ளார்கள். பொதுவாக இதுபோன்ற குடியிருப்பு திட்டங்களை தொடங்கும் போது ஒரே ஒரு பூமி பூஜை செய்வது தான் வழக்கம். ஆனால், ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தினர் வாடிக்கையாளர்கள் அனைவரின் இடத்திலும் பூமி பூஜை நடத்தி அனைவருக்கும் கலசம் வழங்கியிருப்பது, வாடிக்கையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியதோடு, அவர்களை மகிழ்ச்சியடையவும் செய்திருக்கிறது.

உயர்ந்த வாழ்க்கைத் தரம், அமைதியான சூழல், பாதுகாப்பான சுற்றுச்சூழல் என இன்றைய வீடு வாங்குபவர்களின் தேவைகளை மிக துல்லியமாக கணித்து, அவர்களுக்கு ஏற்ற வசதிகள் மற்றும் சலுகைகள் என நுகர்வோர் விருப்பங்களை நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டு ரூஃப்வெஸ்ட் நிறுவனம் அதன் முந்திய திட்டங்களில் மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா மூலம் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் தனது மைல்கல்லை பிரம்மாண்டமான முறையில் அடைந்துள்ளது.

OMR-ல் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளான திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகள் மெட்ரோ ரயில் மற்றும் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. மாற்று வணிக மாவட்டமாக உருவெடுத்துள்ள இப்பகுதிகள் எதிர்காலத்தில் சென்னையை போன்று நவீன துணை நகரமாக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *