ராபின் ஹுட் படத்திற்காக மீண்டும் இணையும் நிதின் & வெங்கி குடுமுலா

நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் “ராபின்ஹூட்” படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது !! முன்னணி நட்சத்திர நடிகர் நிதின், இயக்குநர் வெங்கி குடுமுலா இருவரும் இரண்டாவது முறையாக ஒரு மிகப்பெரும் திரைப்படத்தில் இணைகின்றனர். இப்படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அட்டகாசமான கூட்டணியில் இப்பட அறிவிக்கப்பட்ட கணத்திலேயே, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது. தயாரிப்பு தரப்பு குடியரசு தின நன்னாளில் இப்படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படத்திற்கு ராபின்ஹுட் என்று பெயரிடப்பட்டுள்ளது. அனைத்து […]

Continue Reading

ரசிகர்களுக்கு கிடைத்த அற்புதமான குணச்சித்திர நடிகை லிசி ஆண்டனி

சமீபத்திய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில், தன்னுடைய நடிப்பு திறமையால், தனித்து தெரியும் நடிகை லிசி ஆண்டனி திரையுலகில் 10 வருடத்தை கடந்திருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் அசத்தி வரும் லிசி, தற்போதைய ப்ளூஸ்டார் திரைப்படத்தில் அம்மாவாக கலக்கியிருக்கிறார். மொத்தப்படத்திலும் கவனம் ஈர்க்கும் அவரது நடிப்பிற்கு, பல இடங்களிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் படம் மூலம் அறிமுகமானவர் லிசி ஆண்டனி. முதல் படத்திலேயே நடிக்கத் தெரிந்த நடிகை […]

Continue Reading

சந்தானம் படத்திற்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா.? ஆச்சரியத்தில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத் தயாரிப்பாளர்

  பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் நடராஜ் பிள்ளை பேசியதாவது, “கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து பீப்பிள் மீடியா ஃபேக்டரி இயங்கி வருகிறோம். இந்த ஏழு வருடங்களில் தெலுங்கில் ’கார்த்திகேயா2’, ‘வெங்கி மாமா’, ‘நிசப்தம்’ என நிறைய […]

Continue Reading

ப்ளூ ஸ்டார் விமர்சனம்.. கிரிக்கெட் ஸ்டார்

  அரக்கோணத்தில் இரு அணிகளுக்கு இடையே உண்டாகும் ஒரு கிரிக்கெட் போட்டி தான் இந்தப் படம். ப்ளூ ஸ்டார் அணியின் கேப்டன் அசோக்செல்வன்.. இவரது தம்பி பிரித்வி.. அசோக்கின் காதலி கீர்த்தி பாண்டியன்.. ஆல்பா பாய்ஸ் அணியின் கேப்டன் சாந்தனு.. 10 – 12 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் இனி இந்த ஊரில் கிரிக்கெட் விளையாட கூடாது என கிராமத்து மக்கள் முடிவெடுக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் அசோக் & சாந்தனு மோதிக்கொள்ள தங்கள் […]

Continue Reading

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்… சிங்கார சலூன்

  தன் வீட்டு அருகே உள்ள கடையில் முடி திருத்தம் செய்பவர் சாச்சா (லால்). இவரின் அபார திறமையை சிறுவயதில் காணும் ஆர்.ஜே பாலாஜி அவரைப் போல தானும் உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும்.. ஹேர் ஸ்டைலிஸ்டாக மாற வேண்டும் என பல தடைகளை தாண்டி உயர்வது தான் இந்த படத்தின் கதை.. பெரும்பாலும் நக்கல் நையாண்டி செய்யும் ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தில் அடக்கி வாசித்து நடிப்பில் தன் முதிர்ச்சியை காட்டி இருக்கிறார். நாயகியாக வரும் […]

Continue Reading

ஐந்து படங்களில் ஷாருக்கானின் மூன்று படங்கள் படைத்த சாதனை

ஷாருக்கான் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே (பதான்) மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கியதன் மூலம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதைத்தொடர்ந்து ‘ஜவான்’, ‘டங்கி’ என பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்து இந்த ஆண்டு முழுவதும் திரையுலகில் ஆட்சி செய்து ஆதிக்கம் செலுத்தினார். இந்நிலையில் ‘பதான்’ வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையிலும், ஷாருக்கானின் ‘ஜவான்’, ‘டங்கி’ என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை வழங்கியதால் அவரது ரசிகர்கள் ஷாருக்கின் படங்களை நினைவுக்கூறுகிறார்கள். பதானுக்கு பிறகு ஷாருக்கான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட […]

Continue Reading

உலக சாதனை படைத்த ‘டீன்ஸ்’.. இமான் பிறந்த நாளை கொண்டாடிய படக்குழு

நடிகரும் இயக்குந‌ருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய திரைப்படமான ‘டீன்ஸ்’, தணிக்கை சான்றிதழுடன் திரையரங்குகளில் முதல் பார்வை வெளியான முதல் படம் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனைக்கான சான்றிதழை புதன்கிழமை (ஜனவரி 24) சென்னையில் நடைபெற்ற விழாவில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் படக்குழுவினருக்கு உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ பதிவு அமைப்பான‌ வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் அலுவலர்கள் வழங்கினர். இந்த நிகழ்வில், இசையமைப்பாளர் D. இமானின் பிறந்தநாளை ‘டீன்ஸ்’ படக்குழுவினர் உற்சாகமாகக் கொண்டாடி, இமான் மற்றும் […]

Continue Reading

ஜிவி. பிரகாஷ் நடித்த ‘ரெபல்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ஞானவேல் ராஜா

இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். […]

Continue Reading

விடைகளை தேடும் நாயகன்.. நரேன் நடிப்பில் உருவான ‘ஆத்மா’

KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்தினை தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல […]

Continue Reading

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் ‘போர்’ போடும் அர்ஜுன்தாஸ் & காளிதாஸ்

இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள “போர்”, படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாழ்வின் தார்மீக சிக்கல்கள் மற்றும் மனித இயல்புகளை இரண்டாக பிரிக்கும் இந்த போஸ்டர், விஷுவலாக இரண்டு போஸ்டர்கள் போன்று, பாதி பாதியாக பிரிந்துள்ளது. இதிலிருந்து பார்வையாளர்களை ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லும், […]

Continue Reading