டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் பொருளாளர் சீனிவாச மூர்த்தி மறைந்தார்
டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் பொருளாளர் திரு சீனிவாச மூர்த்தி இன்று (ஜனவரி 27) காலமானார். இவருக்கு வயது 50.
சீனிவாச மூர்த்தியின் வீட்டு முகவரி: எண் 18 B, கடம்பாடி நாயக்கர் தெரு, விஜயா நகர் அருகில், இரண்டாவது தெரு, ஸ்ரீதேவி கார்டன் ரோடு, வளசரவாக்கம், சென்னை – 87.
இவரது இறுதி ஊர்வலம் சனிக்கிழமை (ஜனவரி 28) அன்று காலை 11 மணிக்கு இல்லத்தில் இருந்து புறப்பட்டு கேசவர்த்தினி இடுகாட்டை சென்றடையும்.
சீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.