சினிமா செய்திகள்

சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-1 தேர்வு முடிவுகளில், சன் ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். சன் ஐஏஎஸ் அகாடமியில் படித்த மாணவி பிரியதர்ஷினி மாநில அளவில் 6-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இ. அபிநயா 8-வது இடமும், எஸ். அஸ்வினி 12-வது இடமும், கார்த்திகா பிரியா 20-வது இடமும், சி. விக்னேஷ் 25-வது இடமும் பெற்று வெற்றி வாகை சூடி இருக்கிறார்கள். தமிழ் வழியில் படித்த மாணவர் ஜேசுதாஸ் மாநில அளவில் மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சன் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் ஷரண் ராஜேந்திரன், “துணை ஆட்சியர் உள்ளிட்ட அரசு பணியிடங்களில் காலியாக இருக்கும் 66 உயர் பதவிகளுக்காக டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் சென்னை அண்ணாநகரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சன் ஐஏஎஸ் அகாடமியில் படித்த பல மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். எங்களின் பயிற்சி முறைக்கும் மாணவர்களின் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த வெற்றியாக இதை நாங்கள் பார்க்கிறோம். குரூப்-1 தேர்வில் சாதனை படைத்த மாணவ – மாணவிகளுக்கு, அகாடமி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. தொடங்கிய குறுகிய காலக்கட்டத்தில் சன் ஐ‌ஏ‌எஸ் அகாடமி தொடர்ந்து சாதனை புரிந்து போட்டித்தேர்வுக்கான பயிற்சி அளிக்கக்கூடிய நிறுவனங்கள் மத்தியில் தரமான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கி மிகச்சிறந்த நிறுவனமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது,” என்றார். இதற்கு முன்பாக நடந்த வேளாண் அதிகாரிகள் தேர்வில் 137 மாணவர்களும், குரூப்-2 தேர்வில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும் தேர்வு பெற்று சன் ஐஏஎஸ். அகாடமிக்கு பெருமை சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சாதனை பயணத்தின் தொடர்ச்சியாக சன் ஐஏஎஸ் அகாடமியில் புதிய வகுப்புகள் தொடங்க இருக்கின்றன. ஆகஸ்டு 7-ந்தேதி முதல் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்க இருக்கின்றன. இதற்கான மாணவர் சேர்க்கையும் தற்போது நடந்து வருகிறது. பயிற்சி வகுப்பில் கையாளப்படும் அனைத்து மெட்டீரியல்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படும். அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளால் மாணவர்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் 9952920001, 7397355517 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை முன்பதிவு செய்யலாம். மேலும், சென்னை அண்ணாநகர் 6-வது அவென்யூவில் அகாடமி அலுவலகத்தை (பிளாட் எண்:- 1160) நேரடியாக அணுகலாம்.

இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை.. ஆனால் முதன்முறையாக அந்தக்குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் துரிதம்.
இயக்குனர் ஹெச்.வினோத்தின் சீடர் இயக்குனர் சீனிவாசன் இந்த துரிதம் படத்தை இயக்கியுள்ளார்.

‘சண்டியர்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார். கதாநாயகியின் தந்தையாக இயக்குனர் ஏ.வெங்கடேஷ், நாயகனின் நண்பனாக பாலசரவணன் மற்றும் பூ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.

புதியவரான நரேஷ் இந்தப்படத்திற்கு இசையமைக்க, விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் ஒளிப்பதிவு. படத்தொகுப்பை நாகூரான் கவனிக்க, ஆக்ஷன் காட்சிகள் வடிவமைப்பு மணி.
இந்தப்படம் உருவான விதம் குறித்தும், படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் ஒரு தயாரிப்பாளராக படத்தின் நாயகன் ‘சண்டியர்’ ஜெகன் கூறும்போது, “உளுந்தூர்பேட்டையில் தங்கி, அங்கிருந்து சென்னை, மதுரை கோவை, சேலம் என அனைத்து திசையிலும் தினசரி பயணித்து படப்பிடிப்பு நடத்தினோம். குறிப்பாக வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும்போது லைவ்வாக படப்பிடிப்பு நடத்தினோம்.. இதில் ஒரு காட்சியை படமாக்கும்போது சிறிய தவறு நிகழ்ந்தாலும், ரீடேக் எடுப்பது தான் எங்களுக்கு சவாலான விஷயமாக இருந்தது. காட்சியை படமாக்கிய இடத்திற்கே திரும்பி வருவதற்காக மீண்டும் சில கிலோமீட்டர்கள் பயணித்து சுற்றிவர வேண்டி இருந்தது.
அதேபோல இப்படி ஒருமுறை மிகவும் சிரமப்பட்டு செலவு செய்து ரயில் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை படமாக்கினோம். ஆனால் அந்த காட்சியை ஹார்ட் டிஸ்க்கில் காபி பண்ணிவிட்டோம் என நினைத்து தவறுதலாக அழித்து விட்டார்கள். மீண்டும் செலவு வேண்டாமே என்கிற எண்ணத்தில் அதை எப்படியாவது வேறு விதமாக மேட்ச் பண்ணிவிடலாம் என இயக்குனர் கூறினார். ஆனால் செலவானாலும் பரவாயில்லை என மீண்டும் அந்தக்காட்சியை மறுநாள் படமாக்கினோம். இந்தப்படத்தை முடித்ததும், இயக்குனர் ஹெச்.வினோத்திடம் படத்தை போட்டு காட்டினோம்.. படம் பார்த்துவிட்டு நன்றாக வந்திருப்பதாக பாராட்டினார். மேலும், தான் சதுரங்க வேட்டை படம் எடுத்தபோது கூட, பலதரப்பட்ட கருத்துக்களை சொன்னார்கள். அதன் பிறகு தியேட்டர் சூழ்நிலையில் பொதுமக்கள் மத்தியில் வரும் போது மிகவும் பாராட்டப்பட்டது. அதனால் படம் எப்படி வந்துள்ளது என்கிற கருத்துக்களை தெரிந்துகொள்ள நினைத்தால் பொதுமக்களை அழைத்து தியேட்டரில் திரையிட்டு அவர்களது கருத்துக்களை கேளுங்கள். அதுதான் சரியாக இருக்கும் என ஆலோசனையும் கூறினார்.
அதனால் வழக்கமாக சென்னையில் திரையுலகினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தை அழைத்து சிறப்பு காட்சியை திரையிட்டு காட்டுவதற்கு பதிலாக திருநெல்வேலி ஆலங்குளத்தில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் அந்தப்பகுதி மக்களை அழைத்து இந்தப்படத்தை திரையிட்டு காட்டினோம்.. எங்கள் வேலைக்கான அங்கீகாரம், அந்த சராசரி மக்களின் பாராட்டுக்களிலேயே கிடைத்தபோது இன்னும் நம்பிக்கை ஏற்பட்டது. சென்னையில் சிறப்பு காட்சி திரையிட்டபோதும் அதே ரிசல்ட் கிடைத்ததில் இன்னும் நம்பிக்கை ஆனோம்.

இதை தொடர்ந்து, இந்தப்படத்தை தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்” என்றார், படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான ‘சண்டியர்’ ஜெகன்.

நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம்

நடிகர்கள் ; ‘சண்டியர்’ ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், பூ ராமு, ராமச்சந்திரன் (ராம்ஸ்) மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு ; ஜெகன்

இயக்கம் ; சீனிவாசன்

இசை ; நரேஷ்

ஒளிப்பதிவு ; வாசன்

படத்தொகுப்பு ; நாகூரான்

ஆக்சன் ; மணி

மக்கள் தொடர்பு ; KSK செல்வா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *