காதலிக்க நேரமில்லை படப்பிடிப்பு நிறைவு

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “காதலிக்க நேரமில்லை” ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இணை தயாரிப்பு M.செண்பகமூர்த்தி, […]

Continue Reading

அக்டோபரில் வெளியாகும் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் “மார்ட்டின்”

பிரின்ஸ் துருவா சர்ஜாவின் “மார்ட்டின்” திரைப்படம் உலகமெங்கும் 11 அக்டோபர் 2024 வெளியாகிறது !! கன்னட திரையுலகின் இளம் நட்சத்திர நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி வரும் “மார்ட்டின்” படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சன் அதிரடியாக உருவாகி வரும் “மார்ட்டின்” திரைப்படம் 11 அக்டோபர் 2024 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் உதய் K மேத்தா […]

Continue Reading

தடகளப் போட்டி வெற்றியாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய ரஜினிகாந்த்

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship – SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். வெற்றி பெற்ற வீரர்கள் விவரம் M Shenbagamoothy 100mts – 2nd place 200mts- 3rd place Mixed Relay – 1st Suresh Kasinathan 100- 3rd 200- 3rd […]

Continue Reading

யோகிபாபு பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

“தீக்குளிக்கும் பச்சை மரம் ” திரைப்படத்தை இயக்கிய திரு.வினிஷ் மில்லினியத்தின் இயக்கத்தில், WAMA Entertainment Banner ல் திரு. ஜாஹிர் அலியின் தயாரிப்பில் மற்றும் Saravana Film Arts ன் திரு.சரவணன் அவர்களின் இணை தயாரிப்பில் நடிகர் “யோகி பாபு” இது வரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வெளிவரவிருக்கும் “ஜோரா கைய தட்டுங்க”  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன் ஆகியோர் வெளியிட்டனர். தேசிய விருது […]

Continue Reading

புஜ்ஜி அட் அனுப்பட்டி பட விமர்சனம்..

ஆட்டை தேடும் அப்பாவி சிறுமி பள்ளியின் கோடை விடுமுறை முடியும் இந்த தருவாயில் குழந்தைகளுக்கான படமாக வந்திருக்கிறது ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’. சரவணன் & துர்கா இருவரும் அண்ணன் தங்கைகள்..இவர்கள் ஒரு நாள் பள்ளி விட்டு வீட்டிற்கு வரும்போது பிறந்த 20 நாட்களே ஆன ஒரு ஆட்டுக்குட்டியை வழியில் பார்க்கின்றனர். ஒரு முட்புதற்குள் சிக்கிக் கிடக்கும் அந்த ஆட்டுக்குட்டியை எடுத்து வந்து வளர்க்கின்றனர்.. ஆட்டின் உரிமையாளர் வந்து கேட்கும் வரை வளர்க்கலாம் என்ற பெற்றோர் சொல்ல அதற்கு […]

Continue Reading

96 பட இயக்குநரின் “மெய்யழகன்” திரைப்படத்தில் கார்த்தி

நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். கார்த்தியின்  27 வது படமான இப்படத்திற்கு “மெய்யழகன்“ என்று பெயர் வைத்துள்ளார்கள். கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னொரு மிகமுக்கியமான கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்கிறார். மேலும், ராஜ்கிரண், ஶ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ஶ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண், ரேச்சல் ரெபேகா, அந்தோணி, ராஜ்குமார், இந்துமதி, […]

Continue Reading

வாத்தியார்கள் புடை சூழ “வா வாத்தியார்” கார்த்தி

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் C வில்லியம்ஸ் […]

Continue Reading

அஞ்சாமை திரைப்பட வெளியீட்டில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்

தமிழகத்தில் செயல்பட்டு வந்த மருத்துவ தேர்வு கல்வி முறையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிலையங்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் ஏற்பட்டன. நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட அவதிகளை மையப்படுத்தி இதுவரை எந்தவொரு படமும் வெளியாகவில்லை. நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து உருவாகி இருக்கும் படம் தான் ‘அஞ்சாமை’. இந்தப் படத்தினை அறிமுக […]

Continue Reading

புஷ்பா 2 தி ரூல் – இரண்டாவது சிங்கிள் அறிவிப்பு

புஷ்பாராஜை சந்திக்கும் ஸ்ரீவள்ளி…ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்திருக்கும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘சூடானா… (கப்புள் பாடல்)’ அறிவிப்பு புரோமோ இப்போது வெளியாகியுள்ளது! மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் ‘புஷ்பா 2’ திரைப்படம் இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இதன் டீசர் மற்றும் முதல் சிங்கிளான ‘புஷ்பா…புஷ்பா’ பாடல் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை இன்னும் இரண்டு […]

Continue Reading

பார்க்கிங் திரைப்படத்திற்கு பெருமை சேர்த்த அதன் திரைக்கதை

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதை முக்கிய ஆய்வு நோக்கத்திற்காக (Core Study Purpose) அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது! செழுமையான உள்ளடக்கம் கொண்ட நல்ல கதைகள் எல்லைகளைக் கடந்து உலக அங்கீகாரத்தைப் பெறும். தமிழ் சினிமாவில் வெளியான பல படங்கள் அதன் நல்ல திரைக்கதை மூலம் இதை நிரூபித்துள்ளது. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம். இந்தப் படத்தின் திரைக்கதை தற்போது […]

Continue Reading