மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடித்துத் துவக்கி வைக்க, ஜீவி பிரகாஷ் இசையில், நிதின், ராஷ்மிகா மந்தனா, வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும், #VNRTrio திரைப்படம் பிரமாண்டமாகத் துவங்கியது !!

வெற்றிகரமான திரைத்துறை கூட்டணிகள் இணையும் போது, ரசிகர்களிடம் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் என்றால் அந்த எதிர்பார்ப்பு பன்மடங்கு கூடிவிடும். அந்த வகையில் #VNRTtrio- வெங்கி குடுமுலா, நிதின் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய மூவரும் தங்கள் முந்தைய மெஹாஹிட் படமான பீஷ்மாவை விட, அதிரடியான ஒரு பெரிய படைப்பை வழங்க மீண்டும் இணைந்துள்ளனர். மேலும்,இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் குறித்த […]

Continue Reading

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் – ஐஷ்வர்யா ராஜேஷ் – ஷிவதா இணையும் ‘தீராக் காதல்’

நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் காதல்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தீராக் காதல்’. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை […]

Continue Reading

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக ‘லேபிள்’ தொடரை அறிவித்துள்ளது!!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் தொடர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்த தொடருக்கு ‘லேபிள்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளான ‘கனா’ மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற சூப்பர்ஹிட் படங்களை வழங்கிய பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ், மாறுபட்ட களத்தில் ‘லேபிள்’வெப் சீரிஸை இயக்குகிறார், இந்த தொடரின் படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியது. ‘லேபிள்’ வெப் சீரிஸின் கதையை ஜெயச்சந்திர ஹாஷ்மி […]

Continue Reading

விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிப்பில் உருவான குஷி படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜெயராம், சச்சின் கடேகர், முரளி சர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், […]

Continue Reading

அப்பா பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ் இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கிறார்

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க உள்ளார். ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையம் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் […]

Continue Reading

பெண்களுக்கு ஆயிரம் ரூபாயும் தேவையில்லை.. ஓசி பஸ்ஸும் தேவையில்லை ‘மாவீரன் பிள்ளை’ படவிழாவில் இயக்குநர் பேரரசு காட்டம்

KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் மாவீரன் பிள்ளை. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார். இந்த படத்திற்கு மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ரவிவர்மா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை பிரேம் அமைத்துள்ளார். ‘படத்தொகுப்பை ஜூலியன் மேற்கொள்ள, பாடல்களை ஆலயமணி எழுதியுள்ளார்.. இந்த படத்தின் இசை வெளியீட்டு […]

Continue Reading

வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் பிள்ளை பட இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் மாவீரன் பிள்ளை. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார். இந்த படத்திற்கு மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ரவிவர்மா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை பிரேம் அமைத்துள்ளார். ‘படத்தொகுப்பை ஜூலியன் மேற்கொள்ள, பாடல்களை ஆலயமணி எழுதியுள்ளார்.. இந்த படத்தின் இசை வெளியீட்டு […]

Continue Reading

கனடா வாழும் தமிழர்கள் “விஜய் மக்கள் இயக்கம்” சார்பில் நடிகர் விஜய்யின் ஜூன் 22 ஆம் தேதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட பணிகளை தொடங்கியுள்ளனர்

கனடா வாழும் தமிழர்கள் “விஜய் மக்கள் இயக்கம்” சார்பில், நடிகர் விஜய்யின் ஜூன் 22 ஆம் தேதி பிறந்த நாளை முன்னிட்டு, மூன்று மாதம் முன்பாகவே, இன்றிலிருந்து தங்களின் நலத்திட்ட பணிகளை தொடங்கியுள்ளனர். இசையமைப்பாளர் பரத்வாஜ் அவர்களின் மருமகன் கார்த்திக், “கனடா விஜய் மக்கள் இயக்கம்” தலைவராக இருக்கிறார். பரத்வாஜ் மகளும், பாடகியுமான ஜனனி, விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். மற்றும் துணைத் தலைவர் பாலாஜி ஆகியோர் தலைமையில், கனடாவில் இன்று முதல் விஜயின் […]

Continue Reading

‘‘டைரக்டர் ராம.நாராயணனைப் போல் திட்டமிடலில் இப்போது கண்ணன் இருக்கிறார்…’’ தயாரிப்பாளர் கே.ராஜன் பாராட்டு

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘காசே தான் கடவுளடா’. இயக்குநர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில், எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம், 1972 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான ‘காசேதான் கடவுளடா’ படத்தின் ரீமேக் என்பது குறிப்படத்தக்கது. பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ராஜ் பிரதீப் இசையமைத்துள்ளார். மிர்ச்சி சிவா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகி.. இவர்களுடன் யோகிபாபு, கருணாகரன், […]

Continue Reading

பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை  ஷில்பா ஷெட்டி   இணைந்துள்ளார் !

நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில்,  பிரமாண்டமான பான் – இந்திய ஆக்சன் படமாக உருவாகும்   ‘கேடி-தி டெவில்’ படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்டை  தயாரிப்பாளர்கள்  வெளியிட்டுள்ளனர். பாலிவுட் பவர்ஹவுஸ் ஸ்டார் ஷில்பா ஷெட்டி குந்த்ரா, இந்த பான்-இந்தியா திரைப்படத்தில் சத்யவதி எனும் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த அறிவிப்பு  ரசிகர்கள் மத்தியில் பெரும்  உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு  அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் துருவா சர்ஜாவுடன், […]

Continue Reading