தம்பி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராஜா கிளி’ சுரேஷ்காமாட்சி தயாரிப்பில் பூஜையுடன் தொடக்கம்

‘மாநாடு’ என்கிற மிகப்பெரிய வெற்றி பெற்ற கமர்ஷியல் படத்தை மட்டுமல்ல, ‘கங்காரு’, ‘மிகமிக அவசரம்’ என எளிய மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சொல்லும் கருத்தாழம் கொண்ட படைப்புகளையும் தயாரித்து வெளியிட்ட வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படம் ‘ராஜா கிளி’ இந்தப் படத்தின் பூஜை இன்று மிக எளிய முறையில் நடைபெற்றது. ‘சாட்டை’, ‘அப்பா’, சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘வினோதய சித்தம்’ ஆகிய படங்களை தொடர்ந்து […]

Continue Reading

‘‘புதிய படங்களை ஒரே நேரத்தில் பல ஓடிடியில் ஒளிபரப்பும் வாய்ப்பு இப்போது இருக்கிறது…’’ -நாட் ரீச்சபிள் படவிழாவில் நம்பிக்கை தந்த இயக்குனரின் பேச்சு

Crackbrain Productions தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாட் ரீச்சபிள்’ ( Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவிருப்பதை தொடர்ந்து படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குநர் சந்துரு முருகானந்தம் பேசியதாவது… இந்த திரைப்படத்தை முதலில் பைலட் பிலிமாக எடுத்தோம். […]

Continue Reading

குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளை காமெடியாக சொல்லும் ‘லோக்கல் சரக்கு’

‘ ஒரு குப்பைக் கதை’, ‘நாயே பேயே’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரபல நடன இயக்குநர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. படத்தில் தினேஷுடன் யோகி பாபுவும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, உபாசனா ஆர்.சி நாயகியாக நடித்திருக்கிறார். இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி ஏனைய நட்சத்திரங்கள். டிஸ்கவர் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வலண்டினா சுவாமிநாதன், டாக்டர்.பத்மா வெங்கடசுப்ரமணியன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி […]

Continue Reading

‘இரவின் நிழல்’ திரைப்படத்தை பார்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் – இயக்குனர் பார்த்திபனுக்கு பாராட்டு!

திரு. மு. க ஸ்டாலின் அவர்கள், இயக்குனர் _ நடிகர் திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை கண்டுகளித்தார். திரைப்படத்தைப் பார்த்ததும் , முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்கள் பார்த்திபனின் இந்த அசாத்தியமான சாதனை முயற்சியை வெகுவாகப் பாராட்டி, “இரவின் நிழல் திரைப்படம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில் அற்புதம் !” என்று பாராட்டி , பார்த்திபனையும் படக்குழுவினர் யாவரையும் வாழ்த்தினார். முதல்வருக்கு இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் ‘நேற்றைய […]

Continue Reading

டாக்டர் ஆகிறார், டைரக்டர் ஷங்கர் டைரக்டர் ஷங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது.

ஷங்கருக்கு டாக்டர் பட்டம் அறிவித்து வேல்ஸ் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சினிமா என்பது பல கலைத்துறைகளின் சங்கமம். தொடர்பில்லாத துறைகளில் இருந்து பல திறமையானவர்களை ஒன்றிணைத்து அடையாளம் காட்டும் தொடர்பு சாதனம். இப்படிப்பட்ட துறைக்கு பிரமாண்டத்தின் மூத்த பிள்ளையாக இருக்கும் மக்கள் போற்றும் ஒரு கலைஞனைத்தான் இன்று நாம் போற்றுகிறோம். கும்பகோணத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தார். அவரது கல்லூரி நாட்களில், அவர் எழுதத் தொடங்கினார் மற்றும் கலை நிகழ்ச்சிகள் […]

Continue Reading

“சுபாஸ்கரன் சார் சுவாரசியமான மனிதர்; அவருடன் அமர்ந்து இப்படத்தை பார்க்க விரும்புகிறேன்..” – நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி பேசும்போது, உங்கள் அனைவரின் முன்னிலையில் முதல் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. ஜெயராம் சார் கூறியதுபோல, இது நம்முடைய படம். தமிழர்களுடைய படம். எல்லோர் மனதிலும் இருக்கும் படம். ஆனால், இப்படத்தில் ஒரு வித்தியாசம். இப்படத்தின் கதை அனைவருக்கும் தெரியும். இருப்பினும், திரைப்படமாக பார்க்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கிறது. இப்படத்தில் பணியாற்றியது சுவாரசியமாக இருந்தது. நான், ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் சார் தான் அதிக நாட்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம். ஜெயராம் […]

Continue Reading

பொன்னியின் செல்வன் புத்தகத்தை திரைப்படமாக எடுப்பதற்கு பல ஜாம்பவான்கள் முயற்சித்தும் சாத்தியமாக்கி இருப்பது மணி சார்..” – ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி பேசியபோது, உங்கள் அனைவரின் அன்பிற்கு நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், நான், கார்த்தி, ஜெயராம் சார் மூவரும் சேர்ந்து நடிக்கும் போது மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? மக்களின் ஆரவாரம் எப்படி இருக்கும்? மக்கள் எப்படி ரசிப்பார்கள் என்று சிந்தித்துக் கொண்டு தான் நடித்தோம். ஆனால், இன்று சில காட்சிகளுக்கு நீங்கள் தந்த எதிர்வினைகள் ஒன்றே போதும். மிகவும் சந்தோஷமாக உள்ளேன். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளனர். நான் […]

Continue Reading

’விஜயானந்த்’ படத்தை தமிழில் வெளியிடுவது பெருமிதமாக உள்ளது’-நெகிழும் கன்னட தயாரிப்பாளர்

இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ‘விஜயானந்த்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீஸரை படக்குழுவினர் இன்று {ஆகஸ்ட் 2} காலை 10.05க்கு வெளியிட்டனர். டாக்டர்.ஆனந்த் சங்கேஷ்வர், புகழ்பெற்ற VRL குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் விளம்பரதாரர் லாஜிஸ்டிக்ஸ், மீடியா மற்றும் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர், இப்போது “விஆர்எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்”. என்கிற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியுள்ளார். […]

Continue Reading

குலுகுலு பட விமர்சனம்

நாடோடியாக வாழும் சந்தானம், யார் எந்தநேரத்தில் எந்த உதவி கேட்டாலும் மறுப்பு தெரிவிக்காமல் செய்யக்கூடியவர். இ்ந்த குணத்தால் அவர் பல நேரங்களில் சிக்கலையும் சந்திக்கிறார். இந்நிலையில் இளைஞர்கள் சிலர் கடத்தப்பட்ட தனது நண்பனை கண்டுபிடிக்க அவரிடம் உதவி கேட்க… அவர்களுக்கு உதவ களத்தில் இறங்கும் சந்தானத்தை மிகப்பெரிய பிரச்சினை பின் தொடர, அதில் இருந்து அவர் மீண்டாரா? கடத்தப்பட்டவரை கண்டு பிடித்தாரா? என்பது கதை. வாயைத் திறந்தாலே சிரிக்க வைக்கும் சந்தானம் இந்த படத்தில் ஏற்றிருப்பது காமெடிக்கெல்லாம் […]

Continue Reading

தமிழில் அறிமுகமாகும் நடிகர் ஹிர்ரூது ஹாரூனின் ‘தக்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு

நடன இயக்குநரும், இயக்குநருமான பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகி வரும் ஆக்சன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘தக்ஸ்’ எனும் படத்தின் படபிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய ஆக்சன் திரைப்படம் ‘தக்ஸ்’. இந்த படத்தின் மூலம் நடிகர் ஹிர்ரூது ஹாரூன் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் நடிகர்கள் சிம்ஹா, ஆர். கே. சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா […]

Continue Reading