மும்பை மாணவர்களும் ஆல் பாஸ்! தமிழக முதல்வரின் அட்டகாச அறிவிப்பு. முன்னெடுத்த பேரவைச் செயலாளர்..!*

“உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விசயமும் பெரும் கேள்விக்குரியாக இருந்தது. தேர்வுக்கு எப்படி தயாராவது..இப்போதிருக்கும் இறுக்கமான மனநிலையில் தேர்வை எப்படி எதிர்கொள்வது? என்று பத்தாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மனச்சிக்கலில் இருந்தார்கள். இந்நிலையில் மாணவர்களின் இறுக்கத்தை போக்கும் விதமாக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவித்து மாணவர்களின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் கொடுத்தார். […]

Continue Reading

சின்னத்திரை படப்பிடிப்புகள் வரும் 8 ஆம் தேதி முதல் செல்லலாம் – R.K. செல்வமணி

சின்னத்திரை படப்பிடிப்புகள் எப்போது தொடங்கப்படும் என்று தொழிலாளர் களும், தயாரிப்பார்களும் என்னிடம் கேட்டு வருகின்றனர். ஜூலை 6 ஆம் தேதிக்குப் பிறகு பழைய நடைமுறைப்படி செயல்படலாம் என்று அரசு அறிவித்துள்ளது. பழைய நடைமுறை என்றால் ஜூன் 19 ஆம் தேதிக்கு முன்னாடி இருந்த தளர்வுகளுடன் பணிபுரியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ளதால், வருகின்றன 6 ஆம் தேதிக்கு பிறகு, அதாவது 8 ஆம் தேதி முதல் பட்பிடிப்புக்கு செல்லலாம் என்று முடிவு […]

Continue Reading

நடிகர் மோகன்லால் நடிக்க வந்து 42 வருசமாச்சு

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இதுவரை சுமார் 400 படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட படங்களும் அடக்கம். நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், பாடகர் போன்ற பன்முகத் திறமைகளை கொண்டவர். 1978ம் ஆண்டு திரையோட்டினம் என்ற மலையாள படத்தில் அறிமுகமானாலும் சிலபல காரணங்களால் அந்த படம் வெளிவாராமல் போய்விட்டது. எனவே இவரது அடுத்தப் படமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் தான் ஒரு ஹீரோவாக இவரை திரை உலகிற்கு அறிமுகப்படுத்துச்சாம். நடிகர் […]

Continue Reading

மக்களின் உயிரைப் பறிக்கும், வாழ்வாதாரத்தை நசுக்கும் வளர்ச்சி, மக்களுக்கான வளர்ச்சி அல்ல – கமல்ஹாசன்

இன்று நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலைய விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததற்கும், பல பேர் பாதிக்கப்பட்டிருப்பதற்கும் காரணம், ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய்க்கு மேல் இலாபம் ஈட்டும் தொழிற்சாலையின் பராமரிப்பு, பாதுகாப்பு விஷயங்களில் இருக்கும் அசட்டையும், அலட்சியமுமே. கடந்த மூன்றே மாதங்களில் நடந்திருக்கும் இரண்டாவது விபத்து இது என்பது தொழில் வளர்ச்சியில், பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நம் முகத்தில் அறைந்து உரைத்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடுகள் வழங்கப்படுவதோடு இந்த விபத்து கடக்கப்படக் கூடாது. 2019இல் நடந்த […]

Continue Reading

குற்றம் செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் – பாரதிராஜா வேண்டுகோள்

பேரிடர் காலங்களைக் கையாளும் தமிழக அரசுக்கு… நேரம் காலம் பாராமல் தன்னுயிர் பற்றி கவலைப்படாமல் சிறப்பான பணியை முன்வைக்கும் முதல்வர் மற்றும் அதிகாரிகளை நன்றியோடு பார்க்கும் அதேவேளையில், இவ்வரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் ஈன காரியங்களை சில அதிகாரிகள் தங்கள் வரம்பு மீறி செய்துவிடுகிறார்கள். காத்துநிற்கும் காவல் அதிகாரிகள் மத்தியில் அப்பாவி மக்களை வேட்டையாடும் சில ஓநாய்களும் கலந்துவிடுவது ஒட்டுமொத்த காவல்துறையையே பழிச்சொல்லிற்கு ஆளாக்கிவிடுகிறது.. விரும்பத்தகாமல் நடந்துவிடும் சில சம்பவங்களை, சமூகப் பொறுப்புடன் சுட்டிக்காட்ட நாங்கள் கடமை பட்டுள்ளோம்.. […]

Continue Reading