சின்னத்திரை படப்பிடிப்புகள் வரும் 8 ஆம் தேதி முதல் செல்லலாம் – R.K. செல்வமணி

சின்னத்திரை படப்பிடிப்புகள் எப்போது தொடங்கப்படும் என்று தொழிலாளர் களும், தயாரிப்பார்களும் என்னிடம் கேட்டு வருகின்றனர். ஜூலை 6 ஆம் தேதிக்குப் பிறகு பழைய நடைமுறைப்படி செயல்படலாம் என்று அரசு அறிவித்துள்ளது. பழைய நடைமுறை என்றால் ஜூன் 19 ஆம் தேதிக்கு முன்னாடி இருந்த தளர்வுகளுடன் பணிபுரியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நமக்கு அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ளதால், வருகின்றன 6 ஆம் தேதிக்கு பிறகு, அதாவது 8 ஆம் தேதி முதல் பட்பிடிப்புக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்துள்ளோம். சின்னத்திரை சம்பந்தமான சீரியல், வெப் சீரியல், சின்னத்திரை விளம்பரங்கள், குறும்படங்கள் போன்ற அனைத்து படப்பிடிப்புகளுக்கும் 8 ஆம் தேதி முதல் செல்லலாம் என்று முடிவெடுத்துள்ளோம். அனைவருக்கும் நன்றி
