சுட்ட தகவல் – முந்தானை முடிச்சு திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது சுவாரசியமான வி‌ஷயங்கள்

ஏவிஎம்_சரவணன்.. அவர்களின் ஒரு பேட்டியில்.. இயக்குனர் பாக்யராஜூடன், நாங்கள் இணைந்த ‘முந்தானை முடிச்சு’ படத்தின் வெற்றிக்கு, மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தவர் இசைஞானி இளையராஜா. அவரது இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. அதே போல் படத்திற்கு அவர் அமைத்த பின்னணி இசை கூட அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகளின் போது, ‘இந்தப் படத்திற்கு சங்கர்–கணேஷை இசையமைக்க வைக்கலாம்’ என்று என்னுடைய மூத்த சகோதரர் ஏவி.எம்.குமரன் விருப்பம் தெரிவித்தார். ஆனால் […]

Continue Reading

தென்னிந்திய ஜேம்ஸ்பான்ட் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000

சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார். பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், […]

Continue Reading

டி.எஸ்.துரைராஜ் நினைவஞ்சலி😢

நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்ற டி.எஸ்.துரைராஜ், பின்னர் பட அதிபராகவும், டைரக்டராகவும் சாதனை படைத்தார். பந்தயக் குதிரைகளும் வைத்திருந்தார். சென்னை கிண்டியில் நடந்த மிக முக்கிய குதிரைப் பந்தயத்தில், அவருடைய குதிரை வெற்றி பெற்றது. டி.எஸ்.துரைராஜின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை. தந்தை ராஜா நாயுடு, தாயார் நாகலட்சுமி. பட்டுக்கோட்டையில் பள்ளிப்படிப்பை தொடங்கிய டி.எஸ்.துரைராஜ், 5-ம் வகுப்பு வரை படித்தார். அதன் பின்னர், மதுரை பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். தொடர்ந்து, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் பல […]

Continue Reading

இயக்குனர் சீனுராமசாமி’ன் இசைக்கு ஒரு வாழ்த்துப்பா

எழுபதுகளில் தொடங்கிய எங்கள் பண்ணைபுரத்துப் பாணனே மேற்குத்தொடர்ச்சி மலையிலே மிதந்து வந்த மேகமே உமது வருகையை எதிர்பார்த்து இசையின் வாசல் காத்திருந்தது கருப்பு வெள்ளை அன்னக்கிளியாள் பாட்டிசைக்க எங்கள் இதயத்தில் வண்ணக்கிளிகள் பறந்தன அன்று பெய்யத் தொடங்கிய மழை இசையின் சிரபுஞ்சியானது தவிலின் நாவுகளைப் பேச வைத்தாய் தமிழிசைக்கே அது முதுகெலும்பானது உமது மூச்சு புல்லாங்குழலுக்கு சுவாசம் உமது வயலின்கள் சலனப்படமென எங்கள் சாலைகளை உயிர்ப்புறச் செய்தது உமது சங்கீதம் எங்கள் நினைவுத் தடத்தில் பூத்த பூ […]

Continue Reading

நடிகை பிந்துமாதவி அப்பார்ட்மெண்டில் ஒருவருக்கு கொரோனா

கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் பிந்துமாதவி பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் நடித்த கழுகு 2 திரைப்படம் வெளியானது. இதையடுத்து மாயன், யாருக்கும் அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்து வந்த பிந்துமாதவி கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ளார். இந்நிலையில் தான் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதனால் தனிமைப்பட்டிருப்பதாகவும் தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த […]

Continue Reading

அழியாத கோலங்கள் பாலு மகேந்திரா!

திடீரென ஒரு நாள் பாலு மகேந்திரா சாரிடமிருந்து போன். அதை அட்டென்ட் செய்வதற்குள் மனம் பட்ட பாடு அப்படியே இப்போதும் நெஞ்சில் நிற்கிறது. “ஹலோ சார்…” “நான் உன்னைப் பார்க்க வரலாமா?” “சார், நானே உங்க ஆபிஸ்க்கு வரேன் சார்” ‘ஏன், எனக்கு உன்னோட ஆபிஸ்ல ஒரு கப் காபி கொடுக்க மாட்டியா?” நான் என்ன சொல்ல முடியும்? காலத்தால் அழியாத பெரும் படைப்புகளைக் கொடுத்த கலைஞன். என் அலுவலகம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பாலு மகேந்திரா […]

Continue Reading