செல்போன் திருட்டு மூன்று இளைஞர்கள் வாழ்க்கையை செல்லாக் காசாக்கும் கதை.

அன்பு மயில்சாமி, சென்றாயன், யாசர் மூன்று பேருக்கும் பிழைப்பு செல்போன் திருடுவது. அவர்கள் கைக்கு ஒரு ஐ போனும் அதில் ஒரு வில்லங்க வீடியோவும் வந்து சேர்கிறது. அதன்பின் அவர்கள் வாழ்க்கையில் அடிமேல் அடி, அதையெல்லாம் காட்டுவதே ‘அல்டி.’

முன் பாதி ஏனோதானோவென பயணித்தாலும் பின் பாதி திரைக்கதை தீப்பிடித்த வேகம். கதை, திரைக்கதை இயக்கம் எம்.ஜே. ஹுசைன். அல்டிமேட் என்பதன் சுருக்கமே அல்டி என்கிறார் இயக்குநர்.

ஹீரோவாக அன்பு மயில்சாமி. அவரிடமிருந்து ‘அல்டி’க்காத நடிப்பு.

சின்னத்திரை சீரியல்களில் கலக்கிய மனிஷாஜித்தை பெரிய திரைக்கு அழைத்து வந்திருக்கிறது அல்டி. அம்மணி மற்ற காட்சிகளில் குத்துவிளக்குப் பெண்மணி, ரொமான்ஸ் பாட்டில் மூடேத்தும் கண்மணி.

ஹீரோவின் நண்பர்களாக வருகிற சென்றாயனுக்கும் யாசருக்கும் நேர்கிற முடிவு பரிதாபம். யாசர் இந்த படத் தயாரிப்பாளர் ஷேக் முகமதுவின் மகனாம்.

ஏ. வெங்கடேஷ், மாரிமுத்து, பசங்க சிவகுமார் என நடிகர் நடிகைகள் அவரவர் கதாபாத்திரத்தில் நிறைவு. போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவர் சற்றே மிரட்டுகிறார்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் குத்தாட்டப் பாட்டும் இருக்கு, குஜால் பாட்டும் இருக்கு!

நடனம், ஒளிப்பதிவு, எடிட்டிங்… எல்லாமும் கச்சிதம்.

லட்சங்களில் பணம் புழங்கும் செல்போன் திருட்டுக் கும்பல் பற்றிய பின்னணி ஆச்சரியமூட்டுகிறது. திரைக்கதையில் காமெடிக்கும் இடம் கொடுத்திருக்கலாம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/hqdefault-1.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/hqdefault-1-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்செல்போன் திருட்டு மூன்று இளைஞர்கள் வாழ்க்கையை செல்லாக் காசாக்கும் கதை. அன்பு மயில்சாமி, சென்றாயன், யாசர் மூன்று பேருக்கும் பிழைப்பு செல்போன் திருடுவது. அவர்கள் கைக்கு ஒரு ஐ போனும் அதில் ஒரு வில்லங்க வீடியோவும் வந்து சேர்கிறது. அதன்பின் அவர்கள் வாழ்க்கையில் அடிமேல் அடி, அதையெல்லாம் காட்டுவதே 'அல்டி.' முன் பாதி ஏனோதானோவென பயணித்தாலும் பின் பாதி திரைக்கதை தீப்பிடித்த வேகம். கதை, திரைக்கதை இயக்கம் எம்.ஜே. ஹுசைன். அல்டிமேட்...