வசந்த பாலன் இயக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “ஜெயில்” படத்தின் சிங்கள் டிராக்கை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது

அங்காடி தெரு, வெயில், அரவான் காவியத்தலைவன் படங்களை தந்தவர் இயக்குநர் வசந்த பாலன். இவரது புதிய படம் ஜெயில். இதில்
ஜி .வி பிரகாஷ் குமார், அபர்நதி, நந்தன்ராம், பசங்க பாண்டி, ராதிகா, ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்

இப்படத்தின் பாடலை தனுசுடன் அதீதி ராவ் பாடிய பாடியுள்ளார்

அங்காடி தெரு, வெயில் படம் மூலம் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுக படுத்தியவர் வசந்த பாலன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் பாடல்களை சோனி நிறுவனம் வெளியிடுகிறது. படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தனுஷ், அதீதி ராவ் காத்தோடு காத்தானேன் என்ற பாடலை பாடியுள்ளார்கள். கபிலன் இப்பாடலை எழுதியுள்ளார்.
ஜெயில் படத்தை கிரிகேஷ் சினி கீரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார்.