டேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன். இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வசனங்கள், ஆபாச காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இதனால் அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்படவே யூ-டியூப்பிலிருந்து டீசர் நீக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தொடரையே தடை செய்ய வேண்டும் என்று இந்து மத தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இணையதளங்களில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. சென்னை உள்ளிட்ட சில இடங்களில் இந்த தொடர்பாக போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனதா கட்சியின் தலைவர் வி.எஸ்.சந்திரலேகா டுவிட்டரில், இந்து மதத்திற்கு எதிரான காட்மேன் வெப்சீரிஸ் குறித்து ஜீ5யின் சுபாஸ் சந்திராவிடம் பா.ஜ., எம்.பி. சுப்பிரமணிய சுவாமி பேசினார். காட்மேன் வெப்சீரிஸ் வெளியாகாது என அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இந்து தர்மாவின் காவலர் சுப்ரமணிய சுவாமிக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.இதன்மூலம் காட்மேன் வெப்சீரிஸ் விலக்கி கொள்ளப்பட்டதாகவும், இது வெளியாகாது என்று தெரிகிறது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/05/Tamil_News_large_2548816.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/05/Tamil_News_large_2548816-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்டேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன். இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வசனங்கள், ஆபாச காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இதனால் அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்படவே யூ-டியூப்பிலிருந்து டீசர் நீக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தொடரையே தடை செய்ய வேண்டும் என்று இந்து மத தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இணையதளங்களில் கையெழுத்து...