எதிர்பார்ப்பைத் தூண்டும் க/பெ. ரணசிங்கம் டீசர்
விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
க/பெ.ரணசிங்கம் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கும் இப்படத்தை கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரித்துவருகிறார். ரணசிங்கம் என்ற டைட்டில் ரோலில் விஜய் சேதுபதி நடிக்க அவரது மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்தப்படத்தின் டீசரில் பேசப்படும் அரசியல் நிச்சயமாக படம் வெளியான பிறகும் பேசப்படும் எனலாம். குறிப்பாக டீசரில் ஐஸ்வர்யா ராஜேஷ், “இந்தியாவே இல்லன்னு எழுதிக்க போ” என்று பேசும் வசனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது.