பதவியை எதிர்பார்த்து உதவி செய்வது அரசியலில் சாதாரணம். எதையும் எதிர்பாராமல் சக மனிதனுக்கு உதவுவது தான் என்றைக்கும் அசாதாரணமாக இருக்கிறது. அதுவும் கொரோனா பாதிப்பால் உலகம் மிகப்பெரிய இன்னலைச் சந்தித்து வருகிறது. மேலும் அமைப்பு சாரா தொழிலார்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்தப் பாதிப்பு சினிமாத் தொழிலார்களையும் விட்டு வைக்கவில்லை. சினிமாவில் பெப்ஸி தொழிலார்கள் இந்தக் கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள்.

அவர்களின் துயர் துடைக்க பல்வேறு கலைஞர்கள் உதவிகளை வழங்கி வரும் இவ்வேளையில் பெப்ஸியின் சக ஊழியராக இருந்து இன்று ஆர்ட் டைரக்டராக உயர்ந்திருக்கும் கிரணும் தன்னால் முடிந்த 25 ஆயிரம் ரூபாயை பெப்ஸி ஊழியர்களுக்காகக் கொடுத்துள்ளார்.

மேலும் தன்னிடம் உதவியாளர்களாக இருந்தவர்களுக்கும்,ஓய்வு பெற்றுள்ள சீனியர் கலைஞர்களுக்கும் உதவும் பொருட்டு ₹35 ஆயிரம் வழங்கியுள்ளார். இவர் காப்பான் குப்பத்து ராஜா ஆகிய படங்களில் ஆர்ட் டைரக்டராக இருந்தவர். மேலும் இவர் நடிகராகவும் பரிணமித்து வருகிறார். அவருக்கு நமது பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/04/IMG-20200411-WA0055.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/04/IMG-20200411-WA0055-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்தெரிந்து கொள்ளுங்கள்நடிகர்கள்பதவியை எதிர்பார்த்து உதவி செய்வது அரசியலில் சாதாரணம். எதையும் எதிர்பாராமல் சக மனிதனுக்கு உதவுவது தான் என்றைக்கும் அசாதாரணமாக இருக்கிறது. அதுவும் கொரோனா பாதிப்பால் உலகம் மிகப்பெரிய இன்னலைச் சந்தித்து வருகிறது. மேலும் அமைப்பு சாரா தொழிலார்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்தப் பாதிப்பு சினிமாத் தொழிலார்களையும் விட்டு வைக்கவில்லை. சினிமாவில் பெப்ஸி தொழிலார்கள் இந்தக் கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள். அவர்களின் துயர்...