அமலாபாலுடன் திருமணம் செய்து கொண்டதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கார் பாவ்னிந்தர் சிங்.

‘தலைவா’ படத்தின் போது இயக்குநர் விஜய்யுடன் காதல் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொண்டார் அமலாபால். ஆனால், சில வருடங்களிலேயே அவரை டைவோர்ஸ் செஞ்சிட்டு தொடர்ச்சியாக ஆடை மாதிரியான படங்களில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

பின்னர் சில மாசங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாச்சு. ஆனால், தனது காதலர் குறித்த எந்தவொரு விவரத்தையுமே அமலாபால் வெளியிடவே இல்லை. இது குறித்த கேள்விக்குக் கூட “அது என் பெர்சனல் விஷயம்” என்று மட்டுமே பதிலளிச்சு வந்தார்.

இதனிடையே பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அமலாபாலைத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருக்கா. அதனுடன் ‘Wedding Throwback’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். இவர் மும்பையைச் சேர்ந்த பாடகர் என்று தகவல்.. ஆனா இந்த புகைப்படங்களை வெளியிட்ட சில மணித்துளிகளில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கிவிட்டார். இப்போ சில மாசங்களுக்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் ஒரு நியூஸ் வருது

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/amalapaul-1584705263.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/amalapaul-1584705263-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்நடிகைகள்அமலாபாலுடன் திருமணம் செய்து கொண்டதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கார் பாவ்னிந்தர் சிங். 'தலைவா' படத்தின் போது இயக்குநர் விஜய்யுடன் காதல் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொண்டார் அமலாபால். ஆனால், சில வருடங்களிலேயே அவரை டைவோர்ஸ் செஞ்சிட்டு தொடர்ச்சியாக ஆடை மாதிரியான படங்களில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். பின்னர் சில மாசங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாச்சு. ஆனால், தனது...