சிரிப்பது என்பது பெரிய வரம். அது ஒருவனுக்கு சோகத்திலும் கிடைத்தால் வரமா சாபமா என்பது தான் இப்படத்தின் கதை. ஒரு அதிர்ச்சி சம்பவத்திற்கு பின் படத்தின் நாயகன் ஹிப்ஹாப் ஆதிக்கு கஷ்டத்திலும் சோகத்திலும் பயத்திலும் சிரிக்கும் வியாதி வந்துவிடுகிறது. அது அவர் வாழ்வில் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை சிரிக்க சிரிக்க பேசி இருக்கிறது நான் சிரித்தால்.

ஹிப்ஹாப் ஆதிக்கு இப்படம் நல்ல நடிகருக்கான அடையாளத்தை வாங்கிக் கொடுக்கும். படம் முழுதும் சிரித்தபடியே நடித்தாலும் சில எமோஷ்னல் காட்சிகளையும் கரெக்டாக கேண்டில் செய்துள்ளார். நாயகி ஐஸ்வர்யா மேனென் ஓரளவு ஓ.கே ரகம். கே.எஸ் ரவிக்குமார் அதகளமாக நடித்து அதிக மார்க் வாங்குகிறார். அவருக்கு எதிர் வில்லனாக வரும் ரவிமரியாவும் தன் பங்கிற்கு அசத்தியுள்ளார். கே.எஸ் ரவிக்குமார் ஜெயிலில் இருக்கும் வேளையில் வெளியில் அவருக்கான வலது கையாக வலம் வரும் கேரக்டரில் வரும் கிரண் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைக்கிறார். ஷாரா, முனிஷ்காந்த், யோகிபாபு, படவா கோபி என படத்தில் வரும் எல்லாக் கேரக்டர்களும் படத்தைக் காபபற்றி இருக்கிறார்கள்.

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் எப்போதும் ஒரு துள்ளல் இருக்கும். அந்தத் துள்ளல் நான் சிரித்தாலிலும் இனிக்க இனிக்க இருக்கிறது. பாடல்களில் இரண்டு பாடல்களை மட்டும் தவிர்த்து இருக்கலாம்.படத்தின் வேகத்திற்கு அது உதவியிருக்கும். ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் படத்திற்கு தரமான சப்போர்ட்.

படம் முன்பாதி கொஞ்சம் மெதுவாக மூவ் ஆகிறது. இயக்குநர் அதைத் தவிர்த்திருக்கலாம். மேலும் இப்படத்தின் கதையில் ஹிப்ஹாப் ஏன் தன் பிரச்சனையை மற்றவர்களிடம் சொல்லத் தயங்குகிறார் என்ற காரணத்தை ஸ்ட்ராங்காகச் சொல்லி இருக்கலாம். இப்படி வெகுசில குறைகள் இருந்தாலும் நான் சிரித்தால் வாய்விட்டுச் சிரிக்கலாம் என்பது மட்டும் உறுதி

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/02/450-2020010612072921100_Naan-Sirithal-poster.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/02/450-2020010612072921100_Naan-Sirithal-poster-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தமிழக செய்திகள்தரவரிசைதிரை விமர்சனம்திரைப்படங்கள்சிரிப்பது என்பது பெரிய வரம். அது ஒருவனுக்கு சோகத்திலும் கிடைத்தால் வரமா சாபமா என்பது தான் இப்படத்தின் கதை. ஒரு அதிர்ச்சி சம்பவத்திற்கு பின் படத்தின் நாயகன் ஹிப்ஹாப் ஆதிக்கு கஷ்டத்திலும் சோகத்திலும் பயத்திலும் சிரிக்கும் வியாதி வந்துவிடுகிறது. அது அவர் வாழ்வில் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை சிரிக்க சிரிக்க பேசி இருக்கிறது நான் சிரித்தால். ஹிப்ஹாப் ஆதிக்கு இப்படம் நல்ல நடிகருக்கான அடையாளத்தை வாங்கிக் கொடுக்கும். படம்...