ஸ்ரீ க்ரிஷ் பிக்‌சர்ஸ் சார்பில் சாம்பசிவம் தயாரித்துள்ள படம் அடவி. இப்படத்தை ரமேஷ்.ஜி இயக்கியுள்ளார். வினோத் கிஷன் மற்றும் அம்மு அபிராமி நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் பாரதிராஜா, பேசியதாவது,

” இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சாம்பசிவத்தை நான் பாராட்டுகிறேன். அவருக்குப் பெரிய தைரியம். இப்படத்தின் இயக்குநர் பெரிய முயற்சியை எடுத்துள்ளார். வில்லன் நடிப்பு மிகப்பிரமாதமாக இருந்தது. அடவி என்பதற்கு அடர்ந்த காடு என்று பொருளாம். இதைக் கேட்கும் போதே சந்தோஷமா இருந்தது. நம் கலாச்சார விசயங்களை திரையில் பதிவு செய்துள்ள இப்படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள் “என்றார்

விழாவில் தயாரிப்பாளர் ஜி.வி குமார், பாடலாசிரியர் சினேகன், இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டார்கள். இப்படம் பல்வேறு திரை விழாக்களில் திரையிடப்பட்டு பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.