என்னதான் சினிமாவில் புகழ் வெளிச்சம் பெற்ற நடிகையாக இருந்தாலும் பணம் இல்லையென்றால் இவ்வுலகம் மதிக்காது. அதற்கு உதாரணமாக சமீபத்தில் நடிகை ஷர்மிளாவிற்கு நடந்த ஒரு விசயத்தைச் சொல்லலாம் . தமிழில் ‘நல்லதொரு குடும்பம்’, ‘உன்னைக் கண் தேடுதே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஷர்மிளா. ‘இவன் வேற மாதிரி’ படத்தில் நடிகை சுரபிக்கு அம்மாவாக நடித்திருந்தார். இவருக்கு திருமணம் ஆகிய விவாகரத்தும் ஆகியுள்ளது. இந்நிலையில் இவருக்கு ஆர்த்தோ பிரச்சனை வர தனியார் மருத்துவமனையில் சிகைச்சைப் பெற வழியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகைச்சைப் பெற்று வருகிறார். சரியான பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் கஷ்டப்படும் இவரை திரையுலகில் இருப்பவர்கள் யாரும் பார்க்கக் கூட வரவில்லையாம். இதுதான் உலகம்